இலங்கை: விமானப்படை தாக்குதலில் 3 பேர் பலி
கொழும்பு:
இலங்கை கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய பயங்கர தாக்குதலுக்குப்பழி வாங்கும் வகையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை விமானப்படைகுண்டுகளை வீசித் தாக்கி வருகிறது. இதில் ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர்கொல்லப்பட்டனர்.
திரிகோணமலை அருகே கடற்படை வாகனங்கள் மீது நடந்த தற்கொலைப் படைதாக்குதலில் 103 வீரர்கள் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர்படுகாயமடைந்தனர்.
விடுதலைப் புலிகள்தான் இதற்குக் காரணம் என இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த சம்பவத்தால் இலங்கையில் பதட்டம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்குப் பழி வாங்கும் வகையில்இலங்கை விமானப் படை வெறித் தாக்குதலை தொடங்கியுள்ளது. முல்லைத் தீவில்உள்ள புதுக்குடியிருப்பு என்ற இடத்தில் மொத்தம் 16 குண்டுகளை வீசி இலங்கைவிமானப்படை தாக்குதல் நடத்தியது.
இதில் தனிஷ்கா என்ற ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். 16பேர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இப்பகுதியில் உள்ள புலிகளின் முகாம்கள் மீதும், தமிழர்கள் வசிக்கும் கிராமங்கள்மீதும் சரமாரியாக குண்டு வீசி விமானப்படை தாக்குதல் நடத்தி வருகிறது.
புலிகளின் ரேடியோ கோபுரம் தகர்ப்பு:
விமானப்படை குண்டு வீச்சில் விடுதலைப் புலிகளின் ரேடியோ (வாய்ஸ் ஆப்டைகர்ஸ்) கோபுரம் சேதமடைந்தது. முல்லைத் தீவில் உள்ள கொக்கவில் என்றஇடத்தில் இந்த ரேடியோ ஒலிபரப்பு கோபுரம் உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வானொலி நிலைய தலைவரும், விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வனும் அந்த இடத்தை நேரில்சென்று பார்வையிட்டனர்.
இந்தத் தாக்குதல் குறித்து தமிழ்ச் செல்வன் கூறுகையில், புலிகளின் குரலை ஒடுக்கும்இலங்கை அரசின் முயற்சிதான் இந்தத் தாக்குதல். அமைதிப் பேச்சுவார்த்தைநடைபெறவுள்ள நிலையில் இதுபோல இலங்கை அரசு செயல்படுவதுகண்டனத்துக்குரியது.
கோபுரம் தகர்க்கப்பட்டாலும் கூட தடையின்றி வானொலி நிகழ்ச்சிகள்ஒலிபரப்பாகும். ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்துவது இலங்கை அரசின் பாணிஎன்று கூறினார் தமிழ்ச் செல்வன்.
ராஜபக்ஷே கண்டனம்:
இதற்கிடையே, திரிகோணமலை அருகே நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்குஅதிபர் ராஜபக்ஷே கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் 103 பேர்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் குறித்து அதிபர் ராஜபக்ஷேவின் பத்திரிகை தொடர்பாளர் சந்திரபாலாலியநாயகே கூறுகையில், கடற்படையினர் மீதான தாக்குதலை அதிபர் ராஜபக்ஷேகடுமையாக கண்டித்துள்ளார்.
இருப்பினும் இதனால் அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படக் கூடாது எனவும்அவர் விரும்புகிறார். ஜெனீவா பேச்சுவார்த்தை மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வுஏற்பட வேண்டும் என அவர் விருப்பம் கொண்டுள்ளார். தீவிரவாதத்தை ஒடுக்கவும்,தேசிய பாதுகாப்பை அதிகரிக்கும் உறுதியான நடவடிக்கை எடுக்க அதிபர் உறுதியாகஉள்ளார் என்றார் அவர்.
இலங்கை அமைதி செயலக தலைவர் பலித கொஹோனா கூறுகையில்,பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவது குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை.
பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என்பதில் அதிபர் மகிந்தாராஜபக்ஷே உறுதியாக உள்ளார். எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு தகுந்தபதிலடி கொடுப்போம். அதேசமயம் பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்வோம்.
இந்தப் பேச்சுவார்த்தையில் என்ன முடிவுகள் ஏற்படும் என்பதை உறுதியாக கூறஇயலாது. இருப்பினும் ஏதாவது நல்ல விஷயம் நடக்கும் என எதிர்பார்ப்போம்என்றார் பலிதா.
இதற்கிடையே, ஜப்பான் நாட்டு அமைதித் தூதர் யசுசி அகாசி நேற்று கொழும்பு வந்தஇலங்கைத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை அவர்கிளிநொச்சியில் தமிழ்ச் செல்வனை சந்திக்கவுள்ளார்.
இன்று நார்வே தூதர் ஜான் ஹேன்சன் போயர் வருகிறார். இந்த வார இறுதியில்அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர் வரவுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications