வெறி நாய்களிடம் சிக்கி சிறுவன் படுகாயம்!
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெறி நாய்களிடம் சிக்கி 7 வயது சிறுவன் படுகாயமடைந்தான். உயிருக்குஆபத்தான நிலையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குன்னூர் அருகே குட்டபெட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் நாகராஜ். 7 வயதாகும் நாகராஜன்2ம் வகுப்பு படித்து வருகிறான். கன மழை காரணமாக சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
இதனால் தனது நண்பர்களுடன் நாகராஜ் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது விளையாடிக்கொண்டிருந்த பந்து ஓடியதால் அதைப் பிடிக்க பின்னாலேயே ஓடியுள்ளான் நாகராஜ்.
அப்போது தெருவில் இருந்த ஒரு நாய் நாகராஜை விரட்டியுள்ளது. அந்த நாய் விரட்டுவதைப் பார்த்து மேலும்பல நாய்கள் சேர்ந்து கொண்டு நாகராஜை விரட்டியுள்ளன. அத்தனை நாய்களும் சேர்ந்து நாகராஜை பாய்ந்துகடிக்க ஆரம்பித்தன. நாகராஜ் வலி பொறுக்க முடியாமல் அலறினான்.
பள்ளிக் கூட சீருடையைக் கூட மாற்றாமல் தெருவில் விளையாடி நாய்களிடம் சிக்கிக் கொண்ட நாகராஜை அந்தவெறிநாய்கள் சரமாரியாக கடித்துக் குதறின. நாகராஜின் ஓலக் குரலைக் கேட்டதும் தெருவில் இருந்த வீடுகளில்வசித்தவர்கள் வெளியே ஓடி வந்து பார்த்தனர்.
நாகராஜை நாய்கள் கூட்டம் கடித்துக் குதறுவதைப் பார்த்ததும் அவர்கள் குலை பதற தெருவில் கிடந்த கற்கள்,கட்டைகளை எடுத்து அடித்து நாய்களை விரட்டினர். ஆனால் அதற்குள் நாகராஜ் குத்துயிரும், குலையுருமாககிடந்தான். அவனது உடலில் ஆடைகளே இல்லாத அளவுக்கு வெறிநாய்கள் கடித்துக் குதறி விட்டன.
உடனடியாக நாகராஜை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு மக்கள் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிசிகிச்சை செய்த பின்னர் குன்னூரில் உள்ள வெறிநாய்க்கடி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகராஜுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகராஜின்உடலில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெறிநாய்க்கடி ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். அத்தனைஇடங்களையும் சுத்தப்படுத்தி தையல் போடப்பட்டுள்ளது.
நாகராஜுக்கு இன்னும் சுய நினைவு திரும்பவில்லை. நாகராஜின் நிலையைக் கண்டு அப்பகுதி மக்கள் கண்ணீர்வடித்தவண்ணம் உள்ளனர். மருத்துவமனை முன்பே ஊரே கூடி நாகராஜுக்காக பிரார்த்தித்து வருகிறது.
தெருவில் திரியும் நாய்கள் கூட்டத்தில் சிக்கி சிறுவன் குதறப்பட்டது குன்னூரில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications