மனைவிக்கு சித்ரவதை-புதுவை அமைச்சருக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி:மனைவியை சித்திரவதை செய்ததாக புகாருக்கு ஆளாகியிருக்கும் புதுவை அமைச்சர் அங்காளனுக்கு புதுவைசெஷன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
புதுவை சமூக நலத்துறை அமைச்சர் அங்காளன் மீது அவரது 2வது மனைவி கவிப்பிரியா சமீபத்தில் போலீஸில்புகார் கொடுத்தார். தன்னை அங்காளன் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்துவதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரை ஏற்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர் எந்த நேரம் கைதுசெய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் முன்ஜாமீன் கோரி புதுவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அங்காளன் மனு தாக்கல் செய்தார். அந்தமனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று அங்காளனுக்கு முன்ஜாமீன் வழங்கியது.












Click it and Unblock the Notifications