சட்டசபை கூடியது-பாதுகாப்புடன் வந்த எஸ்விஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்தத் தொடர் வரும் 7ம் தேதி வரைநடைபெறும்.

தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. முதலில்இரங்கல் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

முன்னாள் உறுப்பினர்கள் செங்காளியப்பன், பாலகுரு, பெருமாள்ராஜ், செங்கோட்டையன், திப்பையா,நாகலிங்கம் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்களது மறைவுக்கு இரங்கல்தெரிவிக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து மெளன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர்ஆவுடையப்பன் வாசித்தார்.

அவர் பேசுகையில், மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்கப் பற்றாளராக தொடங்கி, பின்னர் மொழிப் போர்தியாகியாக விளங்கியவரும், எழுத்து, பேச்சு இரண்டிலும் சிறந்து விளங்கப் பெற்றவருமான, நட்புக்கும், நல்லதோழமைக்கும் ஏற்றவராக, அரசியல், இலக்கியம் ஆகிய இரண்டு துறைகளிலும் சிறந்தவராக, இனிய பண்பும்,செயல் திறனும் கொண்டவராக வாழ்ந்தவரும்,

2001ம் ஆண்டு முதல் 2006 வரை 12வது சட்டசபை சபநாயகராக சிறப்புடன் பணியாற்றி, அனைத்துதரப்பினரையும் அரவணைத்து செல்லும் பண்பால் அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றவருமான டாக்டர்காளிமுத்து 8.11.2006 அன்று தனது 64வது வயதில் இயற்கை எய்தியது குறித்து இப்பேரவை அதிர்ச்சியும்,ஆற்றொண்ணா துயரமும் கொள்கிறது.

தனது சிறு வயது முதல் மேடைப் பேச்சில் ஆற்றல் மிக்கவராகவும், தேவநேயப் பாவாணர் வழியில் நின்று தமிழ்உணர்வை வளர்த்தவராகவும் இருந்தவர். அவர் பல்வேறு தமிழ் இலக்கிய நூல்களை எழுதியவர். 1971-76,77-80, 80-84, 85-88, 2001-06 ஆகிய ஆண்டுகளில் ஐந்து தடவை எம்.எல்.ஏ. ஆகவும், 1989 முதல் 1991 வரைநாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1977ம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டு வரை அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றினார். அவரது மறைவால்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது என்றார்.

இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து கூட்டம்இன்று ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடியது. அப்போது சட்டசபைக்கூட்டத்தை வருகிற 7ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக மதுரையில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டிப் பேசி அதிமுகவினரின்கடும் கோபத்திற்கு ஆளான மதுரை மேற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம், பலத்த போலீஸ்பாதுகாப்புடன் இன்று சட்டசபைக்கு வந்தார்.

2 துப்பாக்கி ஏந்திய போலீஸார் உள்பட 4 போலீஸார் அவரது பாதுகாப்புக்காக உடன் வந்தனர். சண்முகம்,சட்டசபைக்குள் செல்லும் வரை அவர்கள் கூடவே வந்தனர்.

சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபாநாயகர் செய்தியாளர்களிடம் பேசுகையில, அதிமுக உறுப்பினர்எஸ்.வி.சண்முகம் தனக்கு அதிமுக உறுப்பினர்கள் வரிசையில் இல்லாமல் வேறு இடத்தில் இருக்கை ஒதுக்குமாறுகோரியுள்ளார்.

அதேபோல சில பெண் உறுப்பினர்கள் குறிப்பிட்ட அதிமுக உறுப்பினரின் இருக்கைக்கு அருகாமையில்இல்லாமல் வேறு இடம் ஒதுக்குமாறு கோரியுள்ளனர். இதுகுறித்து உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+