கோவிலில் பெரியார்-பாஜக கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:தமிழகத்தில் இனி எந்தக் கோவிலில் பெரியார் படப்பிடிப்பு நடந்தாலும் அதைத்தடுப்போம் என பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவர் குமாரவேல்கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பெரியார் படப்பிடிப்புநடத்தப்பட்டதற்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம்அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தார்குமாரவேல்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

வரதராஜப் பெருமாள் கோவிலில் பெரியார் படப்பிடிப்பு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்புதெரிவித்து மனு கொடுக்க உதவி ஆணையர் அலுவலகத்திற்கு வந்தோம். இணைஆணையர் போனில் பேசினார். அவர் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்கியதுஎன தெரிவித்தார்.

ஸ்ரீரங்கத்தில் கோவில் கோபுரம் முன் பெரியார் சிலை வைக்கக் கூடாது என்றோம்.சிலை வைத்தால் அங்கு கூட்டம் நடத்துவர். தேவையற்ற சம்பவங்கள் நடைபெறும்என நினைத்து அங்கு சிலை வைக்கக் கூடாது என்றோம். பெரியாருக்கு சிலைவைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை.

கோபுரம் முன் சிலை வைப்பதைத்தான் எதிர்த்தோம். நாங்கள் நினைத்ததுபோல்தற்போது சிலை முன் பொதுக்கூட்டம் நடத்த உள்ளனர். இதனால் மோதல் உருவாகும்.சிலை வைக்க அனுமதி கொடுத்ததன் மூலம் அரசே மோதலை உருவாக்குகிறது.

பெரியார் சிலை உடைக்கப்பட்டதும் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.அதன்பின் பல இடங்களில் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டதற்கு எந்த கட்சியும்எதிர்ப்பு குரல் கொடுக்க முன் வரவில்லை.

அனைவரும் மைனாரிட்டி ஓட்டுகளை மனதில்கொண்டு செயல்படுகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்து மக்களின் மனதை புண்படுத்தும்செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. அடுத்தக்கட்டமாக தற்போது கடவுள் இல்லைஎன்று கூறியவரின் படப்பிடிப்பை புனித தலத்தில் நடத்துவது வேதனையாக உள்ளது.

இதுபோல் மற்ற மதத்தினரின் தலங்களில் படம் எடுக்க அனுமதிப்பார்களா?.அப்படியே மற்ற மதத்தினர் அனுமதித்தாலும் நாங்கள் அனுமதிக்க முடியாது.தமிழகத்தில் எந்தக் கோவில்களில் பெரியார் படப்பிடிப்பு நடத்தப்பட்டாலும்எதிர்ப்போம் என்றார் குமாரவேல்.

பிள்ளையாரிடம் புகார்:

இதற்கிடையே பெரியார் சிலை உடைப்பைத் தொடர்ந்து மடங்கள், கோவில்கள் மீதுநடந்த தாக்குதல்கள் குறித்து பிள்ளையாரிடமே புகார் கொடுக்கும் நூதனபோராட்டத்தை இந்து முன்னணி நடத்தியது.

கரூர் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள பிள்ளையார் கோவிலில் சுவாமியின் சிலைமுன் புகார் கடிதத்தை வைத்து இந்து முன்னணியினர், சுவாமி சிலைகளைசேதப்படுத்தியவர்கள் மீது சுவாமி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவேண்டினர்.

இந்தப் போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+