எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்
சென்னை:பாழும் மனம் கேட்காமல் வேலூர் சிறைக்குச் சென்று இருமுறை சந்தித்து, பூந்தமல்லி சிறையில் காத்திருந்துசந்தித்து கண்ணீர் துடைத்து விட்டதற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று மதிமுகவைஉடைக்க முயற்சி செய்வதாக வைகோ கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.
மதிமுகவை உடைக்க முதல்வர் கருணாநிதி முயற்சிக்கிறார். அவரது தலைமையில் அறிவாலயத்தில் சதிஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் கருணாநிதி அளித்துள்ள பதில்:
அவர் பேசிய இடம் கம்பம். கம்பத்தில் அளவுக்கு மேல் ஏறியிருக்கிறார். திருக்குறளில் நுனக் கொம்பர் ஏறினார்என்ற வரிகளை அவர் மறந்து விட்டார் போலும்.
திமுகவின் பெயர், கொடி, அண்ணா அறிவாலயம் அனைத்தையும் கைப்பற்ற அணி, தேர்ப்புரவி, ஆட்பெரும்படையை அன்றைக்குச் சேகரித்துக் கொண்டு போர் முழக்கம் செய்தவர், உதயசூரியன் சின்னத்தையே ஒழித்துக்காட்டுகிறேன் பார் என்று போர்வாள் ஏந்திப் புறப்பட்டவர்;
சட்டத்தின் முன்னாள் விதிமுறைகளின் முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிப் போய் திரும்பியவர் போல,ஓடி வந்து ஒரு முறையா, இருமுறையா, ஓராயிரம் முறை மன்னிப்புக் கேட்டு, தன்னை விடுவிக்கக் கோடிகையெழுத்து வாங்கி முதல் கையெழுத்துப் போடுங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடி;
இந்தப் பாழும் மனம் கேட்காமல், வேலூர் சிறைக்கு இருமுறை சென்று ஆறுதல், பூந்தமல்லி நீதிமன்றம் வரைகொளுத்தும் வெயிலில் சென்று காத்திருந்து கண்ணீர் துடைத்து, உற்ற நண்பர்களும், உயிர்த் தோழர்களும்எச்சரித்தும் கேளாமல் இரக்கம் காட்டியதற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்றுதான்சொல்லத் தோன்றுகிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
மெரீனாவில் எம்ஜிஆர் அருங்காட்சியகம்:
இதற்கிடையே மெரீனா கடற்கரையில் எம்ஜிஆரின் அருங்காட்சியகத்தை கருணாநிதி ஜனவரி 17ம் தேதி திறந்துவைக்கிறார்.
சென்னை மெரீனா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் ரூ. 40 லட்சம் செலவில் எம்ஜிஆர் அருங்காட்சியகம்கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா எம்ஜிஆரின் பிறந்த நாளான ஜனவரி 17ம் தேதி நடைபெறுகிறது. இந்தஅருங்காட்சியகத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.
இதில் எம்ஜிஆர் பயன்படுத்திய பொருள்கள், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை விளக்கும் புகைப்படங்கள்ஆகியவை பொது மக்கள் பார்வைக்கு வைக்ப்படுகின்றன.
இது தொடர்பாக எம்ஜிஆர் குடும்பத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருக்கும்புகைப்படங்கள், பொருள்கள் போன்றவற்றை கொடுத்து உதவுமாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதையடுத்து ராமவரம் தோட்டத்தில் வசிக்கும் எம்ஜிஆரின் உறவினரான விஜயன், எம்ஜிஆர் பயன்படுத்தியதொப்பி, கறுப்பு கண்ணாடி, வேட்டி சட்டை, சால்வை, பேனா, பாஸ்போர்ட், 1938ல் அவர் எழுதிய டைரி, தனதுசொந்த உயயோகத்திற்காக அவர் எழுதிய இசைப்பயிற்சி புத்தகம், ஏராளமான பரிசுப்பொருள்கள், எம்ஜிஆரின்வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை விளக்கும் 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களையும் அவர்அரசிடம் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications