புதுவை ஆளுநர் தலைமையில் தண்ணி பார்ட்டி!
புதுச்சேரி:புதுச்சேரியில் பல லட்சம் அரசு பணத்தை செலவிட்டு புதுவை ஆளுநர் முகுந்த் மித்தி,முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட விருந்தில் மது வகைகள், அசைவஉணவுகள் பரிமாறப்பட்டன.
புதுவை மாநில சுற்றுலாத் துறை சார்பில் கிருஸ்துமஸ்- புத்தாண்டையொட்டி முக்கியப்பிரமுகர்களுக்கு விருந்து கொடுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தவிருந்துக்கு மிக மிக முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். மொத்தம்75 பேர் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.
துணை நிலை ஆளுநர் முகுந்த் மித்தி, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள், உயரதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். விருந்துக்கானநிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில்சுற்றுலாத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
புதுவை பழைய துறைமுகத்தில் புதன்கிழமை இரவு விருந்து நிகழ்ச்சி தொடங்கியது.ஆளுநர் மித்தி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தலைமைச் செயலாளர் பிரதீப்மெஹ்ரா, அரசுத் துறைச் செயலாளர்கள், காவல்துறை ஐஜி உள்ளிட்டோர் விருந்துக்குவந்திருந்தனர்.
யானை மாலை அணிவிக்க, தாரை தப்பட்டை முழங்க விருந்துக்குவந்திருந்தவர்களுக்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த யானைசுவாமிமலையிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தது.
துறைமுகத்தின் உள்ளே நுழைந்தவர்கள் சாரட் குதிரை வண்டியில் ராஜாக்கள் கணக்கில்உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். ஆளுநர் மித்தி, சாரட் வண்டியில் ஏறியதும் படுகுஷியாகி விட்டார். முகம் முழுவதும் சிரிப்பாக, பூ>ப்பாக சாரட் வண்டியில் சுற்றிசுற்றி வந்தார்.
துறைமுக வளாகத்தில், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விருந்து நிகழ்ச்சிஅட்டகாசமாக தொடங்கியது. குளிர் அதிகமாக இருந்ததால் மேற்கத்தியகலாச்சாரப்படி ஒருபக்கம் குச்சிகளைப் போட்டு அனல் மூட்டி அசத்தியிருந்தனர்.மெளன ராகம் படத்தில் வரும் பனி விழும் இரவு என்ற பாடல் ஒலிக்காததுதான் ஒரேகுறை!
விருந்து ஒருபக்கம், மறுபக்கம், கலை நிகழ்ச்சிகள். இந்தியிலும், தமிழிலும் சூப்பர்ஹிட் சினிமா பாடல்கள் ஒலிக்க, வான வேடிக்கைகளுக்கும் குறைச்சல் இல்லை.இப்படியாக ஆரம்பித்த விருந்தில் உயர் ரக மது வகைகளும் கண்ணாடி கிளாஸ்களில்தளும்பத் தளும்ப ஊற்றப்பட்டன.
சியர்ஸ் குரல்கள் துறைமுகத்தை கிடுகிடுக்க வைக்க வந்திருந்த பெரும்பாலானவர்கள்தாக சாந்திக்குத் தாவினர்.
தாகம் முடிந்தாயிற்று, வயிற்றுப் பசியை போக்க வேண்டாமா? மட்டன், சிக்கன்,இறால், மீன், பல வகை சாலட்டுகள், சூப்புகள் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள்பரிமாறப்பட்டன.
சாப்பிட்டு முடித்து களைப்பிலும், மது மயக்கத்திலும் இருப்பவர்கள் கட்டையைநீட்டுவதற்காக வெள்ளை நிற திண்டுகள் நிறைய புல்வெளியில் போடப்பட்டிருந்தன.அதில் படுத்தபடி பால் நிலாவையும், கொட்டும் பனியையும் ரசித்தபடி பலர் நீண்டநேரமாக கிறங்கிக் கிடந்தனர்.
நள்ளிரவையும் தாண்டி நடந்த பார்ட்டி ஒரு வழியாக முடிந்தது. மது மயக்கத்திலிருந்துவிடுபட்டவர்கள் மொள்ளமாக நடந்து கார்களில் ஏறி இருப்பிடத்தை நோக்கிபாய்ந்தனர்.
பல லட்சம் செலவிட்டு இந்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். இதுபுதுவையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications