இன்று முதல் இலவச வேட்டி, சேலை விநியோகம்
சென்னை:பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச, வேட்டி சேலை இன்று முதல் 3.28கோடி பேருக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை, எளியவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் இலவசவேட்டி, சேலை வழங்கப்படுகிறது.
பச்சை நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச வேட்டி, சேலை கிடைக்கும். இந்த ஆண்டுமொத்தம் 3.28 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. மொத்தம் 1.64 கோடி வேட்டிகளும்,1.64 கோடி சேலைகளும் விநியோகிக்கப்படவுள்ளன.
இன்று முதல் ரேஷன் கடைகள் மூலம் இலவச வேட்டி, சேலை விநியோகம் தொடங்குகிறது. டோக்கன் பெற்றுபின்னர் வேட்டி, சேலைகைளப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டோக்கனில் எந்தத் தேதி குறிப்பிடப்பட்டுள்ளதோ அன்றுதான் ரேஷன் கடைகளுக்கு வந்து வேட்டி,சேலைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் அறிவுறுத்ப்பட்டுள்ளது.
10ம் தேதிக்குள் வேட்டி, சேலை வழங்கும் பணியை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications