புல்லட்களுடன் யுஎஸ்ஸிலிருந்து வந்தவர் கைது
சென்னை:அமெரிக்காவிலிருந்து துப்பாக்கிக் குண்டுகளுடன் சென்னை வந்த பல் டாக்டர் கைது கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து விமான நிலைய சுங்க ஆணையர் ராஜன் கூறுகையில், ஆந்திராவைச் சேர்ந்த ஜார்ஜ் தாமஸ் வெஸ்லிஅமெரிக்காவில் பல் டாக்டராக உள்ளார்.
கிறிஸ்துமஸை தனது உறவினர்களுடன் கொண்டாடுவதற்காக அவர் டிசம்பர் 23ம் தேதி சென்னைக்கு வந்தார்.அப்போது அவரது சூட்கேஸை சோதனையிட்டபோது 50 துப்பாக்கிக் குண்டுகள், துப்பாக்கி லென்சுகள் இருந்ததுதெரிய வந்தது.
இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, ஏற்கனவே இவை தொடர்பாக சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில்தெரிவித்து விட்டதாகவும், குண்டுகளுடன் தன்னை பயணம் செய்ய அமெரிக்க அதிகாரிகள் அனுமதிஅளித்ததாகவும்தெரிவித்தார்.
பறவை சுடுவதற்காகவே இந்த துப்பாக்கிக் குண்டுகளையும், துப்பாக்கி லென்சுகளையும் கொண்டு வந்ததாகவெஸ்லி தெரிவித்தார். மேலும் அமெரிக்காவில் உள்ள துப்பாக்கிச் சுடும் கிளப்பில் தான் உறுப்பினராகஇருப்பதாகவும், துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிய லைசென்ஸ் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து டாக்டர் வெஸ்லியிடமிருந்த துப்பாக்கிக் குண்டுகளும், துப்பாக்கி லென்சுகளும் பறிமுதல்செய்யப்பட்டன. விசாரணைக்குத் தேவைப்படும்போது வருவதாக அவர் எழுதிக் கொடுத்தார். பின்னர் அவரதுபாஸ்போர்ட் மற்றும் இதர பயண ஆவணங்களை சுங்கத்துறை அதிகாரிகள் தங்களது பொறுப்பில் எடுத்துக்கொண்ட பின்னர் அவர் வெளியேற அனுமதிக்கப்பட்டது.
இதற்கிடையே, வெஸ்லி சொன்ன தகவல்களை இந்த குடியுரிமைத் துறை அதிகாரிகள், சான்பிரான்சிஸ்கோவிமான நிலைய அதிகாரிகளிடம் சரி பார்த்தபோது, துப்பாக்கிக் குண்டுகளை எடுத்து வருவது குறித்து வெஸ்லிஎந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என தெரிய வந்தது.
அமெரிக்க பாதுகாப்பு வளையத்தை மீறி துப்பாக்கிக் குண்டுகளை அவர் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.வெஸ்லியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளும், துப்பாக்கி லென்சுகளும் தடயவியல்சோதனைக்காக அனுப்பப்பட்டன. அதில், இவை அனைத்தும் தடை செய்யப்பட்ட பொருட்கள் எனத் தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர் வெஸ்லி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications