முக்கிய முடிவுகள் எடுக்க மாட்டோம்-மேயர்
சென்னை:சென்னை மாநகராட்சித் தேர்தல் வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை முக்கியமுடிவுகள் எதையும் எடுக்க மாட்டோம் என மேயர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாக அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட், தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்தசென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, முகோபாத்யாயா ஆகியோர்இரு வேறு தீர்ப்புகளை அளித்திருந்தனர்.
இதில் கலிபுல்லா அளித்த தீர்ப்பில் 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும்,அங்கு தற்போது வெற்றி பெற்றுள்ள கவுன்சிலர்களுக்கு அளிக்கப்பட்ட சான்றிதழைப்பறிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் நீதிபதி முகோபாத்யாயா அளித்த தீர்ப்பில், மறு தேர்தல் நடத்த வேண்டியஅவசியமில்லை என்றும், இது தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும்தெரிவித்திருந்தார்.
இரு நீதிபதிகளும் தனித் தனி தீர்ப்பு வழங்கியதால் 3வதாக ஒரு நீதிபதி வழக்கைவிசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்கப்படும்.
இந்த நிலையில் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவின் தீர்ப்பை மேற்கோள் காட்டி,சென்னை மாநகராட்சியைக் கலைக்க வேண்டும், 155 வார்டுகளுக்கும் மறு தேர்தல்நடத்த வேண்டும், இறுதித் தீர்ப்பு வரும் வரை மேயரும், கவுன்சிலர்களும் செயல்படக்கூடாது. மாநகராட்சியை முடக்கி வைக்க வேண்டும் என அதிமுக, மதிமுக, பாஜக,தேமுதிக ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந் நிலையில், முதல்வர் கருணாநிதியின் அறிவுரையை ஏற்று இறுதித் தீர்ப்பு வரும்வரை மாநகராட்சியின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக மேயர் மா.சுப்ரமணியன்அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சி தேர்தல் வழக்கில்வெளியாகியுள்ள இரு நீதிபதிகளின் இருவேறு தீர்ப்புகள் குறித்து பல்வேறுகட்சிகளும் கருத்து வெளியிட்டுள்ளன.
இதை பரிசீலித்தும், முதல்வர் கருணாநிதியின் மேலான அறிவரையை ஏற்றும், இறுதித்தீர்ப்பு வரும் வரை எந்தவிதமான முக்கிய முடிவுகளையும், கொள்கைமுடிவுகளையும், நானே, மன்ற உறுப்பினர்களோ, எடுக்க மாட்டோம், செயல்படுத்தமாட்டோம் என்று கூறியுள்ளார் மா.சுப்ரமணியன்.
நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா மறு தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ள 99வார்டுகளில் மேயர் மா.சுப்ரமணியத்தின் வார்டும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications