ரயில்வே: கேரளத்துக்கு கருணாநிதி எச்சரிக்கை!
சென்னை:சேலம் ரயில் கோட்டம் அமைப்பதில் எந்தத் தாமதமும் இருக்கக் கூடாது. எல்லைகளை மாற்ற முயன்றாலோ, தடை ஏற்படுத்த முயன்றாலோபெரும் கிளர்ச்சி வெடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கடுமையாக எச்சரித்துள்ளார்.
சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில் கோட்டம் அமைப்பதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தக் கோட்டத்தைத்தடுக்க கேரள அரசும் பல வழிகளில் முயன்று வருகிறது.
இந்த நிலையில் சேலம் கோட்டத்தை உருவாக்குவதால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க மதுரை கோட்டத்தில் உள்ள சில பகுதிகளை பாலக்காடுகோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று கேரள அரசு யோசனை தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், முதல்வர் கருணாநிதி மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு ஃபேக்ஸ் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேலம் ரயில்வே கோட்டம் எந்தவித காலதாமத.ம் இன்றி, அளவிலோ, எல்லையிலோ எந்தவித மாற்றமும்செய்யாமல் செயல்பட வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், முதலாவதாக உருவாக்கப்பட்ட இந்த்த திட்டத்திற்கு எதிராக சில செயற்கையான பிரச்சினைகள் கிளப்பப்படுவது குறித்து மக்கள்அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே பொதுமக்களிடம் அறிவிக்கப்பட்ட சேலம் ரயில்வே கோட்டம் கோவை, போதனூரை உள்ளடக்கியதாகும். தமிழக மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம் இது. இந்தத் திட்டத்தில் ஏதாவது மாற்றம் செய்தால் அதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இது பெரிய கருத்து வேறுபாட்டிற்கும், போராட்டத்திற்கும் வழி வகுத்து விடும். கிளர்ச்சிகள்தான் வெடிக்கும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தை மறு பரிசீலனை செய்ய மேலும் எந்தப் பேச்சுவார்த்தையும் தேவையில்லை என்ற உறுதியான எண்ணத்தில் நான்இருக்கிறேன்.
தமிழக நலனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், முதலாவதாக போடப்பட்ட திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications