அண்ணனை கொன்ற மன வளர்ச்சி குன்றிய தம்பி!
கோவை:தூங்கிக் கொண்டிருந்த தனது அண்ணனை பிரியாணி கரண்டியால் அடித்து கொன்ற மன வளர்ச்சி குன்றிய தம்பி தானும் தற்கொலைக்கு முயன்றார்.
கோவை நாச்சிதோப்பை சேர்ந்தவர் தங்கராஜ் (22). இவரது தம்பி மோகன்ராஜ் (20) மனநிலை பாதிக்கப்பட்டவர். இரவு தூங்கிகொண்டிருந்தஅண்ணன் தங்கராஜை, மேகன் ராஜ் வீட்டில் இருந்த 2 அடி நீள பிரியாணி கரண்டியால் தலையில் அடித்தார்.
இதில் படுகாயமடைந்த தங்கராஜ் அங்கேயே உயிரிழந்தார். பின்னர் மேகன் ராஜ் அருவமனையை எடுத்து தனது கழுத்தை அறுத்து கொண்டு,கூச்சல் போட்டபடி மயங்கிவிழுந்தார்.
சத்தம் கேட்டு எழுந்த அவரது அம்மா பாப்பாத்தி, தனது மூத்த மகன் இறந்து கிடப்பதையும், இன்னொரு மகன் ரத்த வெள்ளத்தில் மயங்கிகிடப்பதையும் கண்டு கதறி அழுதார். பின்னர் மோகன்ராஜை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications