மதுரை மேற்கு இடைத் தேர்தல்-திமுக போட்டி?
மதுரை:மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக போட்டியிடும் என்று தெரிகிறது.
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற எஸ்.வி.சண்முகம் பின்னர் திமுகவுக்கு ஆதரவாக மாறி, சமீபத்தில் மரணமடைந்தார்.
இந்தத் தொகுதியில் கடந்த தேர்தல் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் பெருமாள் 3,500வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.வி.சண்முகத்திடம் தோற்றார்.
இந் நிலையில் இந்தத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இடைத் தேர்தல் நடக்கலாம் என்று தெரிகிறது. இந்தத் தொகுதியில் மீண்டும்காங்கிரசே போட்டியிட விரும்புகிறது. ஆனால், இத் தொகுதியை பெற திமுகவும் அழகிரியும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் இந்தத் தொகுதியைப் பிடிக்க மாஜி எம்பி ராம்பாபு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வநாயகம், கோவிந்தராஜன் உள்பட பலகாங்கிரஸ் தலைகளும் தீவிரமாக முயன்று வருகின்றன.
ஆனால், இந்தத் தொகுதி நமக்குத் தான் என்று திமுகவினருக்கு உத்தரவாதம் தந்துள்ள அழகிரி இப்போதே தேர்தல் வேலைகளை ஆரம்பிக்குமாறுஉத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் முத்துராமலிங்கம், துணை மேயர் மன்னன், பிடிஆரின் மனைவி ருக்மணி ஆகியோர்விரும்புவதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் இத் தொகுதியில் அண்ணனே நேரடியாக களமிறங்க வேண்டும், நீங்களே போட்டியிட வேண்டும் என அழகிரியை அவரதுஆதரவாளர்கள் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.
மதுரை மத்தியத் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு அழகிரியே முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியை முதுகில் குத்திய எஸ்.வி.சண்முகம் மறைந்துவிட்ட நிலையில் இந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்றிக் காட்ட வேண்டும் என்றமும்முரத்தில் அதிமுக உள்ளது. ராஜன் செல்லப்பா, எம்எஸ் பாண்டியன், செல்லூர் ராஜு, வளர்மதி ஜெபராஜ், ராஜாங்கம் என ஒரு டஜனுக்கும்அதிகமான தலைகள் இந்தத் தொகுதியை பிடிக்க போயஸ் தோட்டத்தில் காய் நகர்த்த ஆராம்பித்துள்ளன.
மதுரை என்பதால் இந்த இடைத் தேர்தலிலும் விஜய்காந்த் மும்முரமாக இறங்குவது நிச்சயம். அவரது கட்சியின் சார்பில் பலமான நபர்இறக்கிவிடப்படக் கூடும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications