ஐ.டி. எக்ஸ்பிரஸ் சாலை: கருணாநிதி ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை அடையாறு மத்திய கைலாஷ் கோவில் முதல் சிறு சேரிவரையில் அமைக்கப்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நெடுஞ்சாலைப்பணிகளை முதல்வர் கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகள்முடியும் என்று பின்னர் அவர் தெரிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில், அடையாறு மத்திய கைலாஷ் கோவில் சந்திப்பு முதல் சிறு சேரிவரையிலான பழைய மகாபலிபுரம் சாலையை தகவல்தொழில்நுட்ப நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு திட்டம் தீட்டப்பட்டது.

ரூ. 205 கோடி செலவில் இந்த சாலை அமைக்கும் பணியும் தொடங்கியது. தற்போது இப்பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சாலைஅமைக்கும் பணியை முதல்வர் கருணாநிதி நேற்று காரில் சென்றபடி பார்வையிட்டார்.மத்திய கைலாஷ் கோவில் சந்திப்பு முதல் சோழிங்கநல்லூர் வரை அவர் சென்று பார்வையிட்டார்.

பின்னர் வேளச்சேரியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும் அவர் பார்வையிட்டார். பின்னர் கோபாலபுரத்தில் உள்ளதனது வீட்டுக்குத் திரும்பிய முதல்வர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் கடந்த ஆட்சியில் திட்டத்தைப் போட்டு விட்டு மிகவும் நிதானமாகவே பணிகள் நடந்து வந்தன. கடந்த ஆட்சியில் 5சதவீத வேலைகளை முடிந்திருந்தன. தற்போதைய திமுக ஆட்சியில் 20 சதவீத பணிகள்முடிந்து விட்டன. ஆகஸ்ட் மாதத்திற்குள் சாலைப் பணிகள் முழுமையாக முடியும்.

இந்த சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இன்னும் 3 ஆண்டுகளில் 3 லட்சம் பேர் வரை பணியாற்றும் நிலை ஏற்படும். இந்தப்பகுதிகளில் மேலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஏற்படுத்த காலி இடம் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த சாலை முழுமையாக போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டவுடன் உலகிலேயே தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப எக்ஸ்பிரஸ் சாலையாகஉருவெடுக்கும்.

விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து பல்வேறு பிரச்சினைகளை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். பொது நன்மைக்காகவும், சென்னைநகரிலும், சுற்று வட்டாரத்திலும், தமிழ்நாட்டிலும் பொருளாதார வளம் பெருகுவதற்குவிமானப் போக்குவரத்தும் ஒரு முக்கியமான வசதி, வாய்ப்பு என்பதை கருதிப் பார்த்தால் பிரச்சினைக்கு இடம் இல்லை.

இருப்பினும் இதில் நாங்கள் மூர்க்கத்தனமான முறையைக் கையாளாமல் பாச உணர்வோடு, பரிவு காட்டி மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு எல்லாத்தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கருதுகிறோம். அத்தகைய ஒத்துழைப்புகிடைத்தால் விமான நிலைய விரிவாக்கம் நடைபெறும் என்றார் கருணாநிதி.

முன்னதாக கருணாநிதி வெளியிட்ட ஒரு அறிக்கையில், காவிரிநடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டால், அது நாம் மேல்முறையீடு செய்வதைப் பாதிக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் பாணி அறிக்கை:

தற்போது வெளிவந்துள்ள நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அதிமுக கோரிக்கையின்படி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டு விட்டால்,அதன் பிறகு நமக்கு ஏற்பட்டிருக்கும் பாதகங்களைப் பற்றி நடுவர் மன்றத்திடம் முறையிட முடியுமா என்பது கேள்விக்குறியாகி விடும்.

அதாவது நடுவர் மன்றத்தின் முடிவினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும். நடுவர் மன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அந்த முடிவுதாவாக்களில் உள்ள மாநிலங்களைக் கட்டுப்படுத்தும். அந்த முடிவினை தாவாக்காளில் உள்ள மாநிலங்கள்நடைமுறைப்படுத்த வேண்டும்.

எனவே மத்திய அரசு நடுவர் மன்றத்தின் ஆணையை அரசிதழில் வெளியிட்டு விட்டால்அதுவே இறுதியானது.

ராமதாஸின் சரமாரிகுற்றச்சாட்டுக்கள் குறித்து ...

ராமதாஸ் இந்த அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறியிருக்கிறார் என்பதை மட்டும் பார்க்கக் கூடாது. எதற்காக அந்தக் குற்றச்சாட்டுக்களைவைத்திருக்கிறார் என்பதை ராமதாஸே சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அதாவது, அவர் சாட்டுகின்ற குற்றச்சாட்டுக்களும், கருத்துக்களும் அகில இந்திய அளவில் தற்போது நான்காவது இடத்தில் உள்ள என்னை, முதல்இடத்திற்குக் காண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை அவரே சொல்லியிருக்கிறார்.

அந்த அளவில்தான் நான் அவருடைய குற்றச்சாட்டுக்களை எல்லாம் எடுத்துக் கொள்கிறேன். வீணையின் வளைவு, நாதம் எழுப்புவதற்கே!

இலவச காஸ் சிலிண்டர் திட்டம் குறித்த அதிமுகவின் போராட்டம் ...

மா>யம்மன் கோவில் கரகம் தூக்கி ஆடுவது போல பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது அதிமுகவினர் காலி சிலிண்டர்களை தலையில் தூக்கிவைத்து நடத்திய பாராட்டம்.

கடந்த கால அதிமுக ஆட்சியில், எரிவாயு அடுப்புகள் கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதியில் அளித்து விட்டு தமிழ்நாட்டுத் தாய்மார்களைஏமாற்றியவர்கள் யார் என்பதை ஏமாந்து போன தாய்மார்களுக்கு நன்றாகத் தெரியுமே!

தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என்று திமுகவைப் பார்த்துக் கேட்பதற்கு அவர்களுக்கு என்ன தெம்பு, திராணி உள்ளது? என்று கேட்டுள்ளார்கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+