சென்னையில் ரூ. 58 கோடியில் 4 பாலங்கள்:10 நாளில் அடிக்கல் -15 மாதங்களில் ரெடி!
சென்னை:சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேலும் 4 புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர்மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, வாகனப் போக்குவரத்தை எளிதாக்க புதிதாக நான்கு மேம்பாலங்களைக்கட்ட அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நான்கு மேம்பாலங்களும் தென் சென்னையில் வரவுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை (சேமியர்ஸ் சாலை) - டர்ன்பல்ஸ் சாலைசந்திப்பு, டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை - வடக்கு உஸ்மான் சாலை சந்திப்பு, திருமலைப் பிள்ளை சாலை - கோமதி நாராயண சாலை சந்திப்பு,உஸ்மான் சாலை - துரைசாமி பாலம் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்படவுள்ளன.
புதிய பாலங்கள் வரவுள்ள பகுதிகளை அமைச்சர் ஸ்டாலின் இன்று காலை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். அவருடன் சென்னை மேயர்மா.சுப்ரமணியன், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேமியர்ஸ் சாலைப் பாலைம் ரூ. 12 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது. வடக்கு உஸ்மான்சாலை, எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பில் வரவுள்ள பாலம் ரூ. 9 கோடியே 72 லட்சம் செலவில் கட்டப்படும்.
திருமலை சாலை சந்திப்பு பாலம் ரூ. 16 கோடியில் உருவாகும். நான்காவது பாலமான உஸ்மான் சாலை, துரைசாமி சாலை சந்திப்பில் கட்டப்படும்பாலம் ரூ. 19.80 கோடியில் கட்டப்படும். நான்கு பாலங்களும் மொத்தம் ரூ. 58.52 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளன.
10 நாட்களில் பாலங்களுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும். 15 மாதங்களுக்குள் பாலங்களை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர்கருணாநிதி பாலங்களுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.
நவீன தொழில்நுட்பப் படி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பாலங்களைக் கட்டும் பணி நடைபெறும் என்றார் ஸ்டாலின்.
பாலம் கட்டப்படும் இடங்களைப் பார்வையிட வந்த மு.க.ஸ்டாலின் படு டிரிம்மாக, டிராக் சூட், டீ சர்ட்டில் வந்ததைப் பார்த்த அத்தனை பேரும்ஆச்சரியமடைந்தனர். மிக முக்கியமாக மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் காலை 6 மணியளவில் இந்த ஆய்வை அவர் மேற்கொண்டதால்போலீஸாருக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications