வெங்கடாசலபதிக்கு ரூ. 50 லட்சத்தில் வைர பூணூல்
திருச்சி:திருப்பதி வெங்கடாசலபதிக்கு திருச்சி ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் மடம் சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான வைர பூணூல் அணிவிக்கப்படவுள்ளது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநாராயண ஜீயர் சுவாமிகள் மடம் சார்பில், திருப்பதி வெங்கடாசலபதிக்கு பிரமாண்ட வைர பூணூல் அணிவிக்க முடிவுசெய்யப்பட்டது. இதையடுத்து ரூ. 50 லட்சம் செலவில் இந்தப் பூணூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பூணூல் 6ம் தேதி பெருமாளுக்குஅணிவிக்கப்படவுள்ளது.
இந்தப் பூணூல் தயாரிக்கத் தேவையான வைரத்தை ஜீயரின் சீடரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர்தானமாக தந்துள்ளார். அதன் பின்னர் திருப்பதி தேவஸ்தானத்தின் அனுமதியைப் பெற்று பூணூல்தயாரிப்புப் பணி சென்னையில் தொடங்கி முடிவடைந்தது.
மொத்தம் 6 வரிசைகளில் 6 அடி நீளத்தில், 3.25 கிலோ தங்கத்தில், 450 வைரக் கற்களுடன் இந்த பூணூல் தயாரிக்கப்பட்டுள்ளது. மிகவும்நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பூணூல் தற்போதுஜீயர் மடத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தப் பூணூலுடன் பத்மாவதி தாயாருக்கு சாற்றுவதற்காக பட்டுப் புடவைகளும் அனுப்பப்படவுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மடத்தில்வைக்கப்பட்டுள்ள வைரப் பூணூலை பக்தர்கள் பலர் பார்வையிட்டு வணங்கினர்.
6ம் தேதி காலை பூணூல் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications