மனைவிகளை அடிப்பதில் பீகார் ஃபர்ஸ்ட்தென்னிந்தியாவில் தமிழகம் சூப்பர் ஃபாஸ்ட்
சென்னை:இந்தியாவிலேயே பெண்கள் மீதான குடும்ப வன்முறை அதிகம் நடக்கும் மாநிலமாக பீகார் திகழ்கிறது. தமிழகம் 7வது இடத்தில் உள்ளது. ஆனால்தென்னிந்தியாவில் தமிழகம்தான் குடும்ப வன்முறையில் முதலிடத்தில் உள்ளது.
தேசிய குடும்ப நல ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி நாட்டிலேயே குடும்ப வன்முறை அதிகம் நடைபெறும் மாநிலமாக பீகார் விளங்குகிறது.
பீகாரில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள், கணவர்களிடம் அடி வாங்குபவர்களாக உள்ளனர். மனைவிகளை அடிப்பவர்களின்எண்ணிக்கை பீகாரில் 59 சதவீதமாக உள்ளது.
இதற்கு அடுத்து ராஜஸ்தான் (46.3), மத்திய பிரததேசம் (45.8). திரிபுரா (44.1), மணிப்பூர் (43.9), உத்தரப் பிரதேசம் (42.4), தமிழ்நாடு (41.9),மேற்கு வங்கம் (40.3) ஆகிய மாநிலங்கள் உள்ளன. கடைசி இடத்தில் கேரளா உள்ளது.
அதேசமயம், தென்னிந்தியாவில் குடும்ப வன்முறை அதிகமாக நடக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழக நகர்ப்புறங்களை விட கிராமப்பகுதிகளில்தான் குடும்பத்தில் பெண்களுக்கு அதிக அடி, உதை கிடைக்கிறதாம்.
தமிழக நகர்ப்புறங்களில் 39 சதவீத திருமணமான பெண்கள் கணவர்களிடம் சிக்கி அவதியுறுகின்றனர். அதுபோல கிராமப்புறங்களில் 44சதவீதமாக உள்ளது.
ஆந்திராவில், ஆண்களிடம் சிக்கி அவதியுறும் குடும்பப் பெண்களின் எண்ணிக்கை 35.2 சதவீதமாக உள்ளது. கர்நாடகத்தில் 20 சதவீதமாகவும்,கேரளாவில் 16.4 சதவீதமாகவும் இது உள்ளது.
இதேபோல சென்னை நகரில் கணவர்களிடம் சிக்கி கஷ்டப்படும் பெண்களின் எண்ணிக்கை 40.6 சதவீதமாக உள்ளது.
இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள இன்னொரு முக்கிய விஷயம், படித்தவர்களாக இருந்தாலும் சரி, இல்லாதவர்களாக இருந்தாலும் சரி,பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் கஷ்டங்களில் பாரபட்சமே இல்லை என்பதுதான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications