தமிழக-கர்நாடக எம்.பிக்கள் அமளிகெளடாவுக்கு சபாநாயகர் கண்டிப்பு
டெல்லி:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து முன்னாள் பிரதமர் தேவே கெளடா மக்களவையில் சில கருத்துக்களைக் கூறியதற்கு தமிழகத்தைச் சேர்ந்தஎம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பியதால் மக்களவையில் பெரும் அமளி நிலவியது. கெளடாவின் பேச்சுக்கு சபாநாயகர் கண்டனம்தெரிவித்தார்.
மக்களவையில் இன்று கெளடா பேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக மக்களவையின் 193வது விதியின் கீழ் விவாதம் நடத்தசபாநாயகர் அனுமதிக வேண்டும் என்றார்.
இதற்கு திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்.பிக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினர். தமிழகத்தைச் சேர்ந்த அத்தைனஎம்.பிக்களும் எழுந்து கெளடாவைக் கண்டித்து கடுமையாக குரல் எழுப்பினர்.
இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. தமிழக எம்.பிக்களை அமர வைக்க நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியும், தமிழக மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் முயன்றனர். ஆனால் தமிழக எம்.பிக்கள் தொடர்ந்து ஆவேசமாக பேசினர்.
கெளடாவுக்கு ஆதரவாக கர்நாடக எம்.பிக்களும் உரத்த குரலில் பேசினர். இதனால் சில நிமிடங்களுக்கு யார் என்ன பேசுகிறார்கள் என்பதேதெரியாத அளவுக்கு பெரும் அமளியும், கூச்சல், குழப்பமும் நிலவியது.
உறுப்பினர்களை அமைதிப்படுத்த முயன்று தோல்வியுற்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கோபமடைந்து, உறுப்பினர்களின் செய்கை மிகவும்மோசமாக உள்ளது. நாம் ஜனநாயகத்திற்குப் பொருத்தம் இல்லாதவர்கள் எனத் தெரிகிறது.
கெளடாவின் கோரிக்கையை நான் நிராகரிக்கவில்லை. காவிரிப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க நான் நேரம் ஒதுக்குவேன் என்றுதான்கூறுகிறேன்.
விவாதமே கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால் இப்படிக் குழப்பம் செய்தால் நான் எப்படி அதை அனுமதிக்க முடியும்?
என்னை கெளடா சந்தித்தபோது அவரிடம் விவாதத்திற்கு வாய்ப்பளிக்கிறேன், வழக்கமான விவாதங்கள் முடிந்த பின்னர் இந்தப் பிரச்சினைதொடர்பாக பேசலாம் என்றுதான் கூறினேன். ஆனால் கெளடா இப்போது இந்தப் பிரச்சினையை எழுப்பியது தவறு.
என்னை நேற்று கெளடா சந்தித்தபோது, காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் பதிலுரைக்குப் பின்னர் கடைசியாகப் பேசலாம் என்று கூறினேன்.அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் இப்போது பிரச்சினையை ஆரம்பித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கடுமையாகக் கூறினார்சோம்நாத் சாட்டர்ஜி.
முன்னதாக கெளடா பேசுகையில், நான் காவிரிப் பிரச்சினை குறித்து பேச எழவில்லை. அவையின் நடவடிக்கையைக் குலைக்கவும் விரும்பவில்லை.இருப்பினும், இந்தப் பிரச்சினை தொடர்பாக 15 நிமிடங்கள் மட்டும் பேச எனக்கு அனுமதிக்க வேண்டும் என்றார். இதுதான் தமிழக எம்.பிக்களைகோபப்படுத்தியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications