400 வயது குரானை விற்க முயன்றவர் கைது
பெங்களூர்:ஒளரங்கசீப் காலத்து, 400 ஆண்டு பழமையான திருக்குரானை விற்க முயன்ற நபரை பெங்களூர் போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூர், எம்.ஜி. சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் பழமை வாய்ந்த பொருட்களை விற்க முயற்சி நடப்பதாக போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது.
இதையடுத்து நகர குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் அங்கு விரைந்தனர். அப்போது அந்த ஹோட்டல் முன்பு நின்று கொண்டிருந்த கேரள மாநிலம்திருச்சூரைச் சேர்ந்த சுகுமார் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் தெரிந்ததால் அவரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவரிடமிருந்து 400 ஆண்டு கால பழமை வாய்ந்த திருக்குரான், தஞ்சை மகாராஜா சரபோஜி வரைந்த ஓவியம் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.
இந்த திருக்குரான் முகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்தைச் சேர்ந்தது. அவரது கையொப்பமும் இந்த குரானில் உள்ளது. மொத்தம் 15 கிலோ, 39.9செமீ நீளம், 20 செமீ அகலம் கொண்ட இந்த குரான் நூல், மலர்களின் வாசனையுடன், எளிதில் தீப்பிடிக்காத வண்ணம் நுட்பமாகதயாரிக்கப்பட்டதாகும்.
இந்த குரானின் சர்வதேச மதிப்பு ரூ. 5 கோடியாகும். அதேபோல தஞ்சாவூர் ஓவியத்தின் மதிப்பு ரூ. 10 லட்சமாகும். சுகுமாரைக் கைது செய்தபோலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications