பலியான மீனவர் குடும்பத்துக்கு ஜெ. உதவி:கச்சத்தீவை மீட்க ராமதாஸ் கோரிக்கை
சென்னை:இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் கிறிஸ்டோபரின் குடும்பத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ரூ. 25ஆயிரம் நிதியதவியை அறிவித்துள்ளார். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர்விஜயகாந்த் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகியும் வருகின்றனர். அப்பாவிமீனவர்கள் மீது இதுபோன்ற துப்பாக்கிச் சூடு நடத்தி வருவது கண்டு மன வேதனையும், ஆற்றொணாத் துயரமும் அடைகிறேன்.
10ம் தேதியன்று கச்சத்தீவு அருகே நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாகதுப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் பாம்பன் மீனவர் கிறிஸ்டோபர் பலியாகியுள்ளார். 2 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சமீபத்தில்கூட நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கலியபெருமாள் பலியானார். அதே படகில் சென்ற சிவலிங்கம் என்ன ஆனார்என்பது இதுவரை தெரியவில்லை.
மீனவர்கள் மீதான தாக்குலைத் தடுக்காமலும், மீனவர்களின் நலன் மீது அக்கறை காட்டாமலும் இருக்கும் திமுக அரசையும், மத்திய அரசையும்வன்மையாக கண்டிக்கிறேன்.
கிறிஸ்டோபரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரது குடும்பத்திற்கு அதிமுக சார்பில் குடும்ப நல நிதியாக ரூ. 25 ஆயிரம்வழங்கப்படும்.
காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வில்வர், தாசன் ஆகியோர் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திப்பதுடன், அவர்களின் மருத்துவச்செலவுக்காக தலா ரூ. 5000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
கச்சத்தீவை மீட்க வேண்டும் - ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையை பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து அத்துமீறல்களும்,அட்டூழியங்களும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அண்மைக் காலமாக அவர்களின் தாக்கதல் அதிகமாகி இருக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டம் 4 முறை தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் தாக்கியுள்ளனர். இதில் 3 மீனவர்கள் பலியாகியுள்ளனர்.
தாக்குதல் நடைபெறும்போது ஒவ்வொரு முறையும் மத்திய அரசிடம் நாம் முறையிடுவதும், அவர்கள் எச்சரிக்கை விடுவதும் தொடர் கதையாகிவருகிறது. ஆனால் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் மட்டும் நின்றபாடில்லை.
கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த பின்னர்தான் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வந்துள்ளன. எனவே தமிழகமீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு வேண்டும் என்றால் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும். இந்தியக் கடற்படையைகச்சத்தீவில் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
சிங்கள அரசைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர்கள் என்றும் இந்தியத் தமிழர்கள் என்றும் பேதம் பிரித்துப் பார்ப்பதில்லை. தமிழர்கள் என்றாலேமூர்க்கத்தனமாகத் தாக்கி அழித்து வருகிறார்கள்.
எனவே இந்தியத் தமிழர்களான நமது மீனவர்களின் பாதுகாப்பு என்பது ஈழத் தமிழர்களின் சிக்கலுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதுடன்,பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கு அரசியல் உரிமையைப் பெற்றுத் தந்து அங்கு நிரந்தர அமைதியை ஏற்படுத்த இந்தியா முயற்சிக்க வேண்டும். அதன் முலம்தான்இந்தியத் தமிழர்களான நமது மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பைத் தர முடியும்.
மற்ற பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து விட்டு ஈழத் தமிழர்களின் சிக்கலுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியில் இந்தியா தீவிரமாகஈடுபட வேண்டும்.
கச்சத்தீவை மீட்பதும், ஈழத் தமிழர்களின் சிக்கலுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதும் மட்டுமே இந்தியத் தமிழர்களான நமது மீனவர்களுக்குநிரந்தரப் பாதுகாப்பைத் தேடித் தரும் என்பதை மத்திய அரசுக்குத் தமிழகத்தில் உள்ளவர்கள் புரிய வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
உணர்வுப்பூர்வ நடவடிக்கை தேவை - விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் தமிழக மீனவர்கள் இறப்பதும், படுகாயம்அடைவதும் வாடிக்கையாகி விட்டது.
இதுகுறித்து தமிழக அரசு, மத்திய அரசிடம் முறையிடுவதும், கடிதம் எழுதவும் கூட வாடிக்கையாகி விட்டது. ஆனால் இன்று வரை தாக்குதல்நின்றபாடில்லை.
துப்பாக்கிச் சூட்டில் இறந்த பாம்பன் மீனவர் கிறிஸ்டோபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், படுகாயம் அடைந்த மீனவர்களுக்குஆறுதலையும் தெரிவிக்கிறேன்.
இந்தப் போக்கை இனியும் தாமதிக்காமல் உடனடியாக தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் உணர்வுப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications