விடுதலைப் புலிகள்தான் சுட்டனர்: இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:தமிழக மீனவர்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. விடுதலைப் புலிகள்தான் இதற்குக் காரணம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் மீது சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கடும் தாக்குதலை முடுக்கி விட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது.

நேற்று காலை இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாம்பன் மீனவர் கிறிஸ்டோபர் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம்காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். பல்வேறு போராட்டங்களை அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு தங்களது நாட்டு கடற்படை காரணம் அல்ல, விடுதலைப் புலிகள்தான் சுட்டனர் என்று இலங்கைவெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் கொழும்பில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இதுபோன்ற சம்பவங்களில் இலங்கை கடற்படைஈடுபடவில்லை. துப்பாக்கிச் சூட்டுக்கும், இலங்கை கடற்படைக்கும் தொடர்பு இல்லை.

இந்திய கடல் எல்லைக்குள் ஊடுறுவி கடற்படை எந்தத் தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. விடுதலைப் புலிகள்தான் இதற்குக் காரணமாக இருக்கமுடியும்.

இதன் மூலம் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வலுவான உறவை சீர்குலைக்க அவர்கள் சதி செய்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் கட்டமைப்பை உடைக்க தமிழக அரசு தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களது ஆயுதக் கடத்தலைத்தடுத்து அவர்களின் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் இதை திசை திருப்பும் வகையில் புலிகள்அமைப்புதான் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கடற்படை அதிகா>களிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது, இந்த சம்பவத்தில் கடற்படைக்குத் தொடர்புஇல்லை என்பது தெரிய வந்தது. கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் எதுவும் அந்த சமயத்தில் இல்லை என்பதும்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்து மற்றும் பாதுகாப்பில் ஈடுபடுவதுகுறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது. இந்திய அதிகாரிகளுடன் இதுகுறித்து விவாதிக்கப்படும்.

இலங்கை கடல் எல்லைக்குள் ஊடுறுவி வரும் இந்திய மீனவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என இலங்கை கடற்படைக்கு உரியஉத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு டெல்லி வந்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே, விடுதலைப் புலிகளை ஒடுக்க இந்திய, இலங்கை கடற்படைகள் கூட்டுரோந்தில் ஈடுபடலாம் என யோசனை தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மத்திய அரசும்இந்த யோசனையை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து விட்டது.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி விட்டு, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க கூட்டு ரோந்து செல்லலாம் என்றதனது பழைய யோசனையை தூசி தட்டி எடுத்துள்ளது இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+