ஈராக்: தற்கொலைத் தாக்குதலில் 70 பேர் பலி
பாக்தாக்: ஈராக்கில் உணவுப் பொருட்களுக்கு மத்தியில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த லாரி, பொதுமக்கள் மீது பாய்ந்து வெடித்ததில் 70 பேர் பரிதாபமாக இந்தனர். 150 பேர் படுகாயம் அடைந்தனர்.
சதாம் சாவுக்குப் பின்னர் ஈராக்கில் வன்முறைகள் பல மடங்கு அதிகரித்து விட்டன. அங்கு தற்கொலைப் படைத் தாக்குதல் இல்லாத நாளே இல்லை எனும் அளவுக்கு நிலைமை மகா மோசமாக உள்ளது.
மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், மசூதி, பேருந்து நிலையம், ஹோட்டல்கள்தான் அதிக அளவில் குண்டு வைத்துத் தகர்க்கப்படுகின்றன. கார்கள், லாரிகளில் குண்டுகளை கொண்டு வந்து தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்படுகிறது.
நேற்று மொசூல் அருகே உள்ள தல்அபார் நகரில் ஒரு மார்க்கெட்டுக்கு லாரி ஒன்று வந்தது. அதில் உணவுப் பொருட்கள் இருந்தது. ஆனால் அவற்றுக்கு மத்தியில் சக்தி வாய்ந்த குண்டுகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
அந்த பகுதியில் ஏற்கனவே தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக மார்கெட் மூடப்பட்டு இருந்ததால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்தது.
புதிதாக உணவு பொருட்களுடன் ஒரு லாரி மார்க்கெட்டுக்கு வந்ததும் பொதுமக்கள் அந்த லாரியை சூழ்ந்து கொண்டனர். பாதுகாப்புக்கு நின்ற ராணுவத்தினரும் அது உணவு பொருள் கொண்டு வந்த லாரி என நினைத்து உள்ளே அனுமதித்தனர்.
லாரியை நிறுத்துவது போல வந்த டிரைவர், திடீரென பொதுமக்கள் மீது லாரியை செலுத்தி குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் குண்டுகள் பலத்த சப்தத்துடன் வெடித்தது. இந்த பயங்கர சம்பவத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் உயிர்யிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications