சிறுவனின் காலில் கொதி கஞ்சியை ஊற்றிய கொடூர ஆயா

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

சத்துணவு சாப்பிட லேட்டாக வந்த 9 வயது சிறுவனின் காலில், சத்துணவு ஆயா, கொதி கஞ்சியை எடுத்து ஊற்றியதால் சிறுவன் படுகாயமடைந்தான்.

நெல்லை, பாளையங்கோட்டை அருகே உள்ள முள்ளிகுளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் மாயாண்டி (9). பாளையங்கோட்டையில் உள்ள எஸ்.டி.சி. தொடக்கப் பள்ளியில் 4வது வகுப்பு படித்து வருகிறான்.

புதன்கிழமை மதியம் சத்துணவு சாப்பிட தாமதமாக வந்துள்ளான் மாயாண்டி. இதனால் ஆத்திரமடைந்த சத்துணவுக் கூட ஆயா, பிச்சம்மாள், பாத்திரத்தில் கொதி நிலையில் இருந்த சாப்பாட்டை எடுத்து மாயாண்டியின் காலில் வீசியுள்ளார்.

இதில் காலில் சூடுபட்டு துடித்தான் மாயாண்டி. கஞ்சி பட்ட இடம் அப்படியே புண்ணாகி விட்டது. வீட்டுக்குத் திரும்பிய மாயாண்டி இதுகுறித்து தனது பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துள்ளான். ஆனால் மாயாண்டியுன் படிக்கும் சக மாணவர்கள் மூலமாக மாயாண்டியின் பெற்றோருக்குத் தெரிந்து விட்டது.

உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்தனர். இந்த தகவல் பரவியதும் முள்ளிக்குளம் கிராமத்தினர் கொந்தளித்தனர். பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு ஆயா மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் குதித்தனர். இதுதொடர்பாக போலீஸிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+