இட ஒதுக்கீடு தடைக்கு மத்திய அரசே பொறுப்பு: ஜெ
சென்னை:பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதற்கு மத்திய அரசும், அதில் பங்கேற்றுள்ள திமுக, பாமக போன்ற கட்சிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுதொடர்பாக சென்னையில் திமுக தலைமையில் அக்கூட்டணியின் தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றி, 31.3.2007 அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொது வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் அதிமுகவும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் அடங்கிய கடிதம் நள்ளிரவில் எங்கள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வேடிக்கை என்னவென்றால் இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. அந்த அரசில் திமுக, காங்கிரஸ், பாமக ஆகியவை அங்கம் வகிக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்னாலிருந்து இயக்குகின்றன. அப்படி இருக்கும்போது இப்படி ஒரு தடை வந்தால் அதற்கு இந்தக் கட்சிகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
ஆரம்பத்திலிருந்தே இந்த விவகாரத்தை மத்திய அரசு சரியாக அணுகவில்லை. அதுமட்டுமல்ல, சட்டம் உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு ஏற்கப்பட்டதும், அதில் தனது வாதங்கைள முழு மனதுடன், மத்திய அரசு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். எடுத்துச் சொல்ல வேண்டிய கருத்துக்களை சரியாக எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்.
அங்கே கோட்டை விட்டு விட்டு தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் என்பது கேலிக்கூத்தாக மட்டுமல்லாமல், நகைப்புக்குரிய விஷயமாகவும் இருக்கிறது.
தமிழகத்தின் ஏகோபித்த உணர்வுகளைக் காட்ட வேண்டும் என்று உண்மையிலேய கருணாநிதி நினைத்திருந்தால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அவர் கூட்டியிருக்க வேண்டும். அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைத்திருக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் அனைவரின் கருத்துக்களையும் கேட்டிருந்தால் அதற்கு அர்த்தம் இருந்திருக்கும்.
அதை விட்டு விட்டு அவர்களாகவே கூடிப் பேசி விட்டு, அவசரம் அவசரமாக பந்த் நடத்தப் போவதாக கூறி விட்டு, அந்தத் தீர்மான நகலை நள்ளிரவில் எங்களது அலுவலகத்தில் கொடுத்திருப்பது முறையல்ல.
இந்த பொது வேலைநிறுத்தம் கண்துடைப்புப் போராட்டம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications