பந்த்: கொடும்பாவி எரிக்க முன்ற 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக, ஆதிக்க சாதிகள் என்று பெயரிடப்பட்ட கொடும்பாவிகளை எரிக்க முயன்ற நான்கு பேரை கோவையில் போலீஸார் கைது செய்தனர்.
கோவை சிவானந்தா சாலையில் இன்று காலை சிலர் கூடினர். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பாதுகாப்புப் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த அவர்கள் திடீரென சாலையில் கொடும்பாவி ஒன்றை எரிக்க முயன்றனர்.
அந்த உருவ பொம்மையில் பிற்பட்ட மக்களை ஒடுக்க வந்த ஆதிக்க ஜாதிகள் என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து பந்த் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து வந்து கொடும்பாவியை எரிக்க விடாமல் தடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications