700 எஸ்.ஐ பணியிடங்ளுக்கு 47,000 போட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 700 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்ளுக்கு மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 12 மையங்களில் உடற் தகுதி தேர்வு நடந்தது. இதில் 47,000 பேர் கலந்து கொண்டனர்.

எஸ்.ஐ பணியிடங்களுக்கான நேரடித் தேர்வு 12 மையங்களில் தொடங்கியது. அந்தந்த சரக டி.ஐ.ஜி தலைமையில் நடந்து வரும் தேர்வை மண்டல ஐ.ஜிக்கள் கண்காணித்தனர்.

காலியாக உள்ள 700 எஸ்.ஐ பணியிடங்களுக்கு 34,742 ஆண்களும், 5,652 பெண்களும் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பத்தாரர்களை மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, ஆண் விண்ணப்பதாரர்களுக்கான உடல் தகுதி தேர்வு நேற்று நடந்தது.

அவர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்ட பின்னர் உயரம், மார்பளவு அளக்கப்பட்டது. அதன் பின்னர் 1,500 மீ ஓட்டத்தை 7 நிமிடத்தில் கடந்தவர்களை தவிர மற்றவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்த கட்டமாக நடக்கவுள்ள கயிறு ஏறுதல்,குண்டு எறிதல்,நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

ஆண்களுக்கரிய தேர்வு முடிவடைந்த பின்னர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடத்தப்படும். அதேபோல் காவல்துறையில் பணியாற்றி வரும் விண்ணப்பதாரர்களுக்கு தனியாக தேர்வு நடத்தப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+