காவிரிக்காக காரைக்காலில் அதிமுக உண்ணாவிரதம்
சென்னை:காவிரி பிரச்சனைக்காக வரும் 7ம் தேதி அதிமுக சார்பில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும் என காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வெளியிட்டு 2 மாதங்கள் ஆன பிறகும்,, மத்திய அரசின் அரசிதழில் தீர்ப்பை வெளியிடுவது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் புதுவை அரசு இருந்து வருகிறது.
தமிழக அரசு போல் மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதைக் கண்டித்து அதிமுக காரைக்கால் மாவட்ட கழகத்தின் சார்பில் காரைக்கால் பேருந்து நிலையம் அருகில் வரும் 7ம் தேதி சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
அதிமுக இளைஞர் அணி செயலாளர் சம்பத் தலைமையிலும், புதுச்சேரி மாநில செயலாளர் எம்எல்ஏ. அன்பழகன், காரைக்கால் மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்திசேகர் ஆகியோர் முன்னிலையிலும் போராட்டம் என்று கூறியுள்ளார்.
மோர்தனா அணை திறப்பு-அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றி
இதற்கிடையே, வேலூர் மாவட்டம் மோர்தனா அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது, அதிமுக அறிவித்த போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவிலுள்ள மோர்தானா அணையிலிருந்து ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் திமுக பதவியேற்று 11 மாதங்கள் ஆகியும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.
இதற்காக ஏப்ரல் 4ம் தேதி போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தேன். இதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மாலை 4 மணிக்குள் தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவித்துள்ளார்.
அதே சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அமைச்சர் துரைமுருகனும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரனும் இது குறித்து சிந்திக்காத நிலையில் அதிமுக இந்த பிரச்சனைக்கு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தப் பின்னர் இவ்வாறு அறிவித்திருப்பது அதிமுகவிற்கு மாபெரும் வெற்றியாகும்.
இதே போல் புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி துணை நகரம் அமைப்படுவதை எதிர்த்து அதிமுக போராடிய பின்னர் இந்த திட்டம் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளது அதிமுகவிற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்?












Click it and Unblock the Notifications