அடித்துக் கொள்ளும் காங்கிரஸார்-கிருஷ்ணசாமி வருத்தம்
சென்னை:காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் அதிகரித்து வருவதும், இதுதொடர்பாக ஆங்காங்கே நடைபெறும் மோதல்களும் மிகுந்த வருத்தம் அளிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராகப் பதவியேற்று 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நல்ல நாளில் மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சி மலர உறுதி எடுப்போம்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக ஆங்காங்கே நடைபெறும் மோதல்கள் குறித்து பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின்றன. இதனால் கட்சியின் பெயர் கெடுவதோடு, கட்சி வளர்ச்சிக்கும் ஊறு நேர்ந்து விடுகிறது.
காங்கிரஸ் கட்சியில் கட்டுப்பாடற்ற போக்கை அனுமதிக்க முடியாது. சோனியா காந்தியின் கரத்தை பலப்படுத்துகிற வகையில்தான் காங்கிரஸார் செயல்பட வேண்டும். இதற்கு மாறாக யாரும் செயல்படக் கூடாது, அதற்கு அனுமதியும் கிடையாது.
மதுரை மேற்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிதான் மீண்டும் போட்டியிடும். அங்கு வெற்றியும் பெறுவோம் என்றார் கிருஷ்ணசாமி. சமீபத்தில் நெல்லைக்கு கிருஷ்ணசாமியும், மத்திய அமைச்சர் இளங்கோவனும் சென்றபோது அவர்கள் கண் முன்பாகவே வாசன் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரை இளங்கோவன் கோஷ்டியினர் நையப்புடைத்த சம்பவம் நினைவிருக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications