விமான தாக்குதலில் புலிகளின் கடற்படை முகாம் தகர்ப்பு
கொழும்பு:முல்லைத் தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்படை முகாமை தகர்த்து விட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விமானப்படை செய்தித் தொடர்பாளர் அஜந்த டி சில்வா கூறுகையில், முல்லைத் தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளின் கடற்படை தலைமை முகாம் உள்ளது. இந்த முகாம் மீது இன்று விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.
இத்தாக்குதலில் புலிகளின் முகாம் முற்றிலும் சேதமடைந்தது. புலிகளின் கடற்படை படகுகள் சேதமடைந்ததா என்பது குறித்து தகவல் இல்லை. இந்த முகாம்தான் கடல் புலிகள் பிரிவின் தலைமையகம் போல செயல்பட்டு வந்தது என்றார்.
இருப்பினும் புலிகள் தரப்பிலிருந்து இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை.
ராணுவத் தாக்குதலில் 35 விடுதலைப் புலிகள் பலி
இதற்கிடையில் மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடந்த கடும் சண்டையில் 35 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த மோதலில் 23 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். மட்டக்களப்பின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் நடந்த மோதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறினார்.
ஆனால் இப்படி ஒரு சண்டையே நடைபெறவில்லை என மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்புக்கு அருகே உள்ள அம்பாரையில்தான் விடுதலைப் புலிகள் வைத்த குண்டில் சிக்கி பஸ் ஒன்று சேதமடைந்தது. அதில் பயணம் செய்த 16 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல, மன்னார் மாவட்டத்தின் வட மேற்குப் பகுதியில் நடந்த சண்டையில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவ செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
இரு மோதல்களிலும் ஒரு ராணுவ வீரர்தான் கொல்லப்பட்டதாக ராணுவ செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து புலிகள் தரப்பிலிருந்து தகவல் ஏதும் இல்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications