பேசக் கூட மறுத்த சேப்பல்: சச்சின் புகார்
மும்பை:உலகக் கோப்பைப் போட்டியின்போது வீரர்களிடம் பேசக் கூட மறுத்தார் கிரேக் சேப்பல். இப்படிப்பட்டவர் அணியின் மூத்த வீரர்கள் குறித்து புகார் கூறியுள்ளது வருத்தம் தருகிறது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மூத்த வீரர்கள் மாபியா கும்பல் போல செயல்படுகின்றனர். இளம் வீரர்களை அவர்கள் மிரட்டுகிறார்கள் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், கங்குலியுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவேன் என சச்சின் பிடிவாதம் பிடித்துள்ளார். யுவராஜ் சிங், ஷேவாக் ஆகியோர் தங்களை நட்சத்திர வீரர்களை போல் நினைத்துக் கொண்டு அகம்பாவத்துடன் நடந்தது கொண்டுள்ளனர் என்று சேப்பல் வாரியத்திற்கு வழங்கத் தயாரித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் உலகக் கோப்பைப் போட்டித் தோல்விக்குப் பின்னர் முதல் முறையாக நேற்று சச்சின் வாய் திறந்தார்.
சச்சின் கொடுத்த பேட்டியில், உலகக் கோப்பையை வெல்வது எங்களது லட்சியமாக இருந்தது. இந்த தோல்வி என் 17 வருட அனுபவத்தில் மிகவும் சோகமான தருணமாக அமைந்து விட்டது.
கடந்த 17 வருடங்களாக இந்திய அணிக்காக ஆத்மார்த்தமாக விளையாடியுள்ளேன். என்னைப் பற்றி இதற்கு முன்பு இருந்த எந்தப் பயிற்சியாளரும் குறை கூறியதில்லை.
பயிற்சியாளர் கிரேக் சேப்பல் மூத்த வீரர்கள் மாபியா கும்பல் என்று கூறியிருப்பது மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாக இருக்கிறது.
உலகக் கோப்பை போட்டியின்போது வீரர்கள் யாரிடமும் அவர் பேசவே இல்லை. நாங்கள் ஏதாவது கருத்து கூறினால் அதை ஏற்க மறுத்தார். பயிற்சியாளரே இப்படி நடந்து கொண்டால், எப்படி வீரர்களால் சிறப்பாக விளையாட முடியும் என்று கூறியுள்ளார் சச்சின்.
விளக்கம் கேட்கும் வாரியம்:
இதற்கிடையே சேப்பல் வழங்கியுள்ள அறிக்கையின் அடிப்படையில் மூத்த வீரர்களிடம் விளக்கம் கேட்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுக்குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய இணைச்செயலாளர் பாண்டவ் கூறுகையில், முதலில் உலக கோப்பை தோல்வி குறித்தும், சேப்பல் மற்றும் அணி மேலாளர் ஜக்தலே ஆகியோரின் அறிக்கை குறித்தும் முன்னாள் கேப்டன்களுடன் விரிவாக ஆலோசிப்போம்.
அவசியம் இருந்தால் சீனியர் வீரர்களிடம் விளக்கம் கேட்போம். 6ம் தேதி சேப்பல், ஜக்டலே, டிராவிட் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து பிறகு முடிவு எடுக்கப்படும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications