சிறுபான்மையினருக்கு கோட்டா: ராமதாஸ் வரவேற்பு
சென்னை:தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என பாமக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சட்டசபையிலும் கோரிக்கை விடுத்து வந்தது.
இந்த நிலையில் தற்போது கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பாராட்டி வரவேற்கிறேன்.
உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும். அது மிக மிக முக்கியம். எனவே நாட்டில் உள்ள தலை சிறந்த சட்ட நிபுணர்களைக் கொண்டு இந்த வழக்கில் தமிழக அரசு வாதாட வேண்டும்.
பாமகவும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பதால், மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட உள்ளது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications