டெல்லி மாநகராட்சி தேர்தல்-பாஜக பெரும் வெற்றி
டெல்லி:டெல்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பலம் பெறும் நிலையை எட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வி கிடைத்துள்ளது.
டெல்லி மாநகராட்சியின் 272 வார்டுளுக்கு தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்தத்திலிருந்தே பாஜக வெற்றியைக் குவிக்கத் தொடங்கியது. இதுவரை 64 வார்டுகளை பாஜக வென்றுள்ளது. 170 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது.
டெல்லி மாநிலத்தில் ஆட்சி புரிந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு 21 வார்டுகளே கிடைத்துள்ளன. 49 வார்டுகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.
சுயேச்சைகள் உள்ளிட்டோர் 14 இடங்களில் வென்றுள்ளனர். 34 வார்டுகளில் முன்னணியில் இருந்து வருகின்றனர்.
பாஜக மிகப் பெரும் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. பாஜக தொண்டர்கள் தலைநகர் முழுவதும் பட்டாசுகளை வெடித்தும், ஆட்டம், பாட்டத்துடனும் கொண்டாடி வருகின்றனர்.
கடைகளுக்கு சீல் வைக்கும் பிரச்சினை, விலைவாசி உயர்வு, ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை ஆகியவையே காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
கடந்த மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 108 வார்டுகளில் வென்றிருந்தது. பாஜக 20, பகுஜன் சமாஜ் 2 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இப்போது பாஜக மிகப் பெரும் வெற்றியைப் பெறும் நிலை உருவாகியுள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications