வெடிமருந்து கிட்டங்கிகளில் அதிரடி சோதனை:ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்-2 பேர் கைது
கோவை:விழுப்புரம் வெடிவிபத்து சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வெடிமருந்து நிலையங்கள், கிட்டங்கிகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இதில் அனுமதி இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் அருகே ஜீப்பில் கொண்டு வரப்பட்ட வெடிபொருட்கள் வெடித்து 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெடிபொருள் கிட்டங்கிகள், நிலையங்களில் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகள், வெடிபொருள் விற்பனை மையங்கள், கிட்டங்கிகளில் சோதனை நடந்தது. இதில், சாலகப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு கிட்டங்கியில் அனுமதி இல்லாமல் 190 ஜெலட்டின் குச்சிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதேபோல 160 டெட்டனேட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றைப் பதுக்கி வைத்திருந்த கல் குவாரி உரிமையாளர் சாமியப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதேபோல, ஈரோடு மாவட்டம் பவானி அருகே மாது தோட்டம் என்ற இடத்தில் வேலுச்சாமி என்பவர் கல் குவாரிகளுக்கு வெடிபொருட்களை விற்க உரிமம் பெற்றுள்ளார். இவரது வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அளவுக்கு அதிகமாக, உரிமம் பெறாமல் வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து 3120 வெடிபொருட்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவரை போலீஸார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications