பாலாற்றில் அணை: தடுக்க நடவடிக்கை-துரைமுருகன்
சென்னை: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என பொதுப்பணிதுறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டசபையில் இதுகுறித்து எழுப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. இது சம்பந்தமாக ஆந்திர முதல்வர் ராஜ சேகர ரெட்டியை சந்திக்க அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஏற்கனவே சென்று அம்மாநில முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளனர்.
அப்போது அவர், அப்படி ஒரு எண்ணம் இருந்தால், தமிழக அரசுக்கு விபரம் தெரிவிப்போம் என உறுதியளித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அணை கட்ட ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டதாக வெளியான தகவல் குறித்து ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
பிறகு பூமி பூஜை நடப்பதாக வந்த தகவலை அடுத்து, இந்த வருடம் ஜனவரி மாதம் ஆந்திர முதல்வருக்கு நானே கடிதம் எழுதினேன். அதற்கு அவர்கள் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பதில் அனுப்பியிருந்தனர்.
நேற்று முன்தினம் ஆந்திர முதல்வரை டெல்லியில் சந்தித்தபோது இது குறித்து கேட்டேன். அணை கட்டும் பணியை ஆரம்பிக்க நாள் எதுவும் குறிக்கப்படவில்லை. விவரம் தெரிந்ததும் தெரிவிப்பதாக கூறினார்.
இந்த அணை வனப்பகுதியில் கட்டப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தால், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதுகுறித்து ஏதேனும் அனுமதி கோரப்பட்டதா என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ராஜாவிடம் கேட்டபோது அப்படி எதுவுமில்லை என்றார்.
தமிழக அரசு இதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. ஒப்பந்தத்தை மீறி ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் துரைமுருகன்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications