திமுக ஆட்சியை கலைக்க ஜெ கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் திமுக அரசை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக பட்ஜெட்டை கண்டித்து வருகின்ற 13ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும். அதில் பட்ஜெட்டை கண்டிப்பதோடு, தமிழகத்தில் பயங்கரவாதம் பெருகியுள்ளதைப் பற்றியும், தமிழகம் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பது பற்றியும் மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டும்.
திண்டிவனம் வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர். மேலும் பள்ளிகள் உள்பட 157 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2 கி. மீ தூரத்திற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கர சேதம் உருவாக்கியுள்ளதால் இது நிச்சயமாக ஆர்டிஎக்ஸ் ஆகத்தான் இருக்கும். இந்த சம்பவம் மூலம் தமிழ்நாடு மிக ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது என மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கருணாநிதி முதல்வரான பிறகு தமிழ்நாட்டில் பயங்கரவாதமும் ரவுடிகளின் அட்டகாசமும் பெருகிவிட்டது. திமுக அரசு அதற்கு ஆதரவு கொடுக்கிறது. ஆயுதக் கடத்தலும், தயாரித்தலும் தமிழகத்தில் ஒரு தொழிலாகவே நடந்து வருகிறது.
எனவே தமிழகத்தை அழிவு பாதையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் உடனே திமுக அரசை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.இது குறித்து மக்களுக்கு எடுத்து கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications