காவிரி அனைத்து கட்சி கூட்டம்- ஜெ கண்டனம
சென்னை:காவிரி விவகாரத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் கருணாநிதி கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நடுவர் மன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து விளக்கம் மற்றும் வழிகாட்டு முறைகள் ஆகியவை குறித்து மனு தாக்கல் செய்வது குறித்து, 15ம் தேதி அனைத்து கூட்டத்தில் விவாதிக்க அதிமுக கலந்துக் கொள்ள வேண்டும் என 10ம் தேதியிட்ட கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
இக்கூட்டம் நடைபெற ஒரு நாளே உள்ள நிலையில், எத்தகைய மனுவை தயார் செய்துள்ளனர் என இதுவரையில் தெரியவில்லை. தமிழக நலனுக்காக செய்யப்பட்டுள்ளதா அல்லது வழக்கம் போல் கர்நாடகவின் நலனுக்காக உதவி செய்வதாக தயார் செய்யப்பட்டுள்ளதா என அறிய இதுவரை எந்த நகலும் அனுப்பப்படவில்லை.
இவர்களது தவறுக்கு மற்ற கட்சிகளும் உடந்தையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இக் கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதுவரை பொது பணித்துறைக்கு இந்த மனு வந்து சேரவில்லை. இதற்கு மேல் அதனை நகல் எடுத்து அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பி, அதை படித்து, 15ம் தேதி காலை 10 மணிக்கு விவாதம் செய்யவேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்கிறாரா.
உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் தமிழக அரசு உச்சநீதிமன்றம் போவதற்கு எண்ணவில்லை. திமுக அரசு திரும்பவும் நடுவர் மன்றத்திற்கு போகத்தான் நினைக்கிறது.
இதனால் தமிழக அரசின் மனு மீது விசாரணை நடத்த கூடாது என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்க வாய்ப்புள்ளது. அல்லது நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி இரண்டையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி அதுவரை மனு நடுவர் மன்றத்தில் கிடப்பில் போடப்படலாம்.
தமிழக அரசு ஏன் உச்சநீதிமன்றம் செல்லவில்லை என நான் கேட்டது கருணாநிதி இதுவரை பதில் கூறிவில்லை.
குறுவை சாகுபடிக்கு நீர் திறந்துவிடப்படும் என்ற கருணாநிதி அந்த பக்கம் வந்தால் மக்கள், இடைக்கால தீர்ப்பு படி நீர் வருமா அல்லது 205 டிஎம்சி நீர் வருமா என அவரிடம் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இதனால் நாளை மறுதினம் நடக்கவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்று தெரிகிறது.
உ.பியில் ஜெ பிரச்சாரம்:
இந் நிலையில் உத்தப் பிரதேச மாநில சட்டமன்ற பேரவை தேர்தலையொட்டி, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் அழைப்பை ஏற்று தேர்தல் பிரசாரத்திற்கு செல்கிறார் ஜெயலலிதா.
வரும் 23ம் தேதி அன்று அலகாபாத்தில் நடக்கும் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேசவுள்ளார்.
ஏற்கனவே பிரச்சாரத்துக்கு உ.பி. செல்ல இருந்த ஜெயலலிதா அதை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டது நினைவிருக்கலாம்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications