மனநலம் பாதித்த 3 குழந்தைகளைக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
வேலூர்:மன நலம் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளை குளத்தில் வீசிக் கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் நாட்டார் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு அய்யப்பன் (6), மோகன் ராஜன் (5), ப்ரிய தர்ஷினி (3) என 3 குழந்தைகள் இருந்தனர்.
மூன்று பேருக்குமே மன நல பாதிப்பு இருந்ததால், முருகன் தம்பதியினர் மனம் உடைந்தனர். குறிப்பாக லட்சுமி மிகுந்த மன வேதனை அடைந்தார். மன நலம் இன்றி அவதிப்படுவதை விட 3 பேரையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தார்.
கடந்த ஆண்டு மே 25ம் தேதி 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வேலூர் மாவட்டம் சோளிங்கருக்குச் சென்றார். அங்கு சென்ற பின்னர் ஆட்டோ மூலம் தக்கான்குளம் என்ற கிராமத்திற்குச் சென்றார்.
கிராமத்துக்கு வெளியே உள்ள குளத்தைப் பார்த்த அவர் அங்கு சென்று தனது மூன்று பிள்ளைகளையும் அடுத்தடுத்து குளத்தில் வீசினார். பின்னர் தானும் குதித்தார்.
அவர்களின் அலறலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நான்கு பேரையும் மீட்டனர். ஆனால் லட்சுமியை மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்தது. மற்ற 3 பேரும் பரிதாபமாக இறந்து போயினர்.
லட்சுமியைக் கைது செய்த போலீஸார் அவர் மீது வேலூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று லட்சுமிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications