ரிலையன்சின் குழாய் கேஸ் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி
சென்னை:தமிழகம் முழுவதும் குழாய் மூலம் எரிவாயுவை வினியோகிக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
ஆந்திரா காக்கி நாடா அருகே கடலுக்கடியில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை குழாய் வழியாக பல மாநிலங்களுக்கும் எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு நகர்களுக்கும் குழாய் மூலமாக எரிவாயு எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி தந்துள்ளது.
இந்த திட்டம் ரூ. 3,000 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் தினமும் 1 கோடி கன மீட்டர் எரிவாயு தமிழகத்திற்கு கிடைக்கும். சென்னை மற்றும் 24 நகரங்களுக்கு இந்த எரிவாயு குழாய் மூலம் வந்து சேரும்.
காக்கிநாடாவிலிருந்து குழாய் மூலம் எரிவாயு திருவள்ளூர் வழியாக தமிழகத்திற்கு கொண்டு வரப்படும். அங்கிருந்து சென்னை, விழுப்புரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக தூத்துகுடி வரை பிரதான குழாய் அமைக்கப்படும். மேலும் கோவைக்கும் எரிவாயு குழாய் அமைக்கப்படும்.
இந் நிறுவனத்திற்கு தமிழக அரசு சில நிபந்தனைகள் விதித்துள்ளது. அதன்படி எதிர்காலத்தில் தமிழகத்தில் எரிவாயு மூலம் மின் உற்பத்தி திட்டம் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு தேவையான எரிவாயுவை அளிக்கவேண்டும்.
மேலும் எதிர்காலத்தில் சிலிண்டர்களுக்குப் பதில் குழாய்கள் மூலமாக வீடுகளுக்கு எரிவாயு வழங்கவும் இந்த குழாய் திட்டம் உதவியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications