எண்ணூரில் கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை
சென்னை: மத்திய அரசு கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை எண்ணூரில் அமைக்க திட்டமிட்டு, அதற்கான பூர்வாங்க சோதனையில் ஈடுபட்டுள்ளது.
சென்னையில் இதுகுறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில்சிபில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேசிய கடல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் கடல்நீரை குடிநீராக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.
இதற்காக பரிசோதனைக் கூடத்திலும், தூத்துக்குடி அருகே 400 மீட்டர் ஆழத்திலும் சோதனைகள் செய்யப்பட்டன. லட்சத்தீவிலும் பரிசோதனை தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 8 தளங்கள் அமைக்கவும் முடிவு செய்துள்ளோம்.
இந்த ஆய்வகங்களில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 5 கோடி லிட்டர் குடிநீர் தயாரிக்கப்பட்டுள்ளது. எண்ணூருக்கு அருகே 40 கி.மீ தூரத்தில் குடிநீர் தயாரிக்கும் மிதக்கும் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து 600 மீட்டர் கடலுக்குள் குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் 9 முதல் 12 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பமுடைய நீரையும், கடலின் மேல் பகுதியில் 28 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள நீரையும் எடுத்து புதிய தொழில்நுட்பம் மூலம் குடிநீர் தயாரிக்க சோதனை நடந்து வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் தயாரிக்க முடியும். இதனால் சென்னையின் 40 சதவீத குடிநீர் தேவை பூர்த்தியடையும். இதற்கான செயல்விளக்கம் இன்று முதல் நடக்கிறது.
இதற்கும், ஏற்கனவே சென்னையில் செயல்படுத்தப்படும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications