முதலில் நடுவர் மன்றத்தை அணுகுவது ஏன்?:அதிமுக கேள்வி-கருணாநிதி பதில்
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து நடுவர் மன்றத்திலேயே மேல் முறையீடு செய்யப்படும். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வரவே 16 ஆண்டுகள் காத்திருக்க ேவண்டியதாகி விட்டது. இந் நிைலயில் மீண்டும் நடுவர் மன்றத்திடமே மேல் முறையீடு செய்வதால் நமக்குத்தான் பாதகம் ஏற்படும்.
கர்நாடக அரசு நேரடியாக உச்சநீதிமன்றத்தில் முறையிடவுள்ளது. அதுேபாலவே தமிழகமும் நேரடியாக உச்சநீதிமன்றத்தையே அணுக வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த கருணாநிதி,
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். அவர் நெஞ்சறிய தவறான கருத்தை சொல்லக் கூடாது.
எல்லோரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்ேதாம்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலில் நடுவர் மன்றத்தில் மேல் முறையீடு செய்வது பிறகு தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வதுதான் சரி என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் நீங்கள் வேறு யாரிடமோ மாட்டிக் ெகாண்டு இப்போது மாற்றிச் சொல்கிறீர்கள். இப்படி தலைகீழாக, கற்பனையாக, புதிதாக பேசுவது முறையல்ல.
இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகளில் குழப்பம் ஏற்பட்டது, தமிழகமே இரண்டுபட்டுக் கிடக்கிறது என்ற செய்தி கர்நாடகத்திற்குப் ேபாய் விடக் கூடாது. கர்நாடகம் இப்ேபாது என்ன செய்துள்ளது என்றால் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்வது, நடுவர் மன்றத்திலும் ஒரு மனுவைத் தாக்கல் செய்வது என்று முடிவெடுத்துள்ளது.
அதைத்தான் தமிழகமும் செய்யவுள்ளது.
நாம் உச்சநீதிமன்றம் ெசன்றால் நீதி கிடைக்க மேலும் 50 ஆண்டுகள் ஆகி விடும். நாம் நடுவர் மன்றத்தை அணுகுவது நமது நன்மைக்காகத்தான். எனவே முதலில் நடுவர் மன்றத்தை அணுகி மனு செய்யவுள்ளோம். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்றார் கருணாநிதி.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications