உ.பி-இந்தியில் பிரச்சாரம் செய்யும் ஜெ
பரேலி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, உத்திர பிரதேச மாநிலம் பரேலியில், சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக வரும் 22ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்கிறார். அப்போது அவர் இந்தியில் பேசி பிரசாரம் செய்யவுள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்கள் பொதுவாக இந்தி பெல்ட் எனப்படும் வட மாநிலங்களில் இதுவரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதில்லை. அந்த வகையில் முதல் முறையாக வடஇந்தியாவில் பிரச்சாரம் செய்து புதிய சாதனை படைக்கவுள்ளார் ெஜயலலிதா.
முதல் முறையாக அதை உடைத்து இந்தியில் பேசி உ.பி. தேர்தல் பிரசாரத்தைக் கலக்கவுள்ளார் ஜெயலலிதா. உ.பி. மாநிலம் பரேலி தொகுதியில், சமாஜ்வாடிக் கட்சித் தலைவரும், முதல்வருமான முலாயம் சிங் யாதவுடன் இணைந்து ஜெயலலிதா பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
தேசிய அளவில் முலாயம் சிங் யாதவ், சந்திரபாபு நாயுடு ஆகிேயாருடன் இணைந்து புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் முதல் முறையாக இந்தியில் பேசி பிரசாரம் செய்யவுள்ள ஜெயலலிதா குறித்து வட மாநிலங்களில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல புலமை உள்ளது. இந்தியிலும் அவர் கை தேர்ந்தவர்தான். இருந்தாலும் இதுவரை இந்தியில் அவர் பொது இடங்களில் பேசியதில்லை.
டெல்லிக்குச் ெசல்லும்போது கூட அவர் ஆங்கிலத்தில்தான் பேசுவார். ஆனால் முதல் முறையாக தற்போது இந்தியில் பிரசாரம் மேற்ெகாள்ளவுள்ளார்.
பரேலியில் ஞாயிற்றுகிழமை நடைபெறவுள்ள பிரசாரத்தில், ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவுடன், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, இந்திய தேசிய லோக் தள் தலைவர் ஓம் பிரகாஷ் சௌதலா, அஸ்ஸாம் மக்கள் கட்சி தலைவர் பிருந்தாவன் கோஸ்வாமி மற்றும் முன்னாள் வெளியுறவுதுறை அமைச்சர் நட்வர் சிங் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
தேசிய அளவில் உருவாக்கப்படவுள்ள 3வது அணிக்கான அச்சாரமாக இந்தக் கூட்டம் கருதப்படுகிறது. பிரசாரத்தில் கலந்து ெகாள்ளும் ெஜயலலிதா, அப்படியே, அடுத்த இரு ஆண்டுகளில் வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்தும் முலாயம், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவரக்ளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஜெயலலிதாவின் இந்தப் பிரசாரம் குறித்து அதிமுக எம்.பி. மலைச்சாமி கூறுகையில், உத்திரபிரதேசத்தில் பிரச்சாரம் செய்ய ஜெயலலிதாவை அழைத்தது தமிழ் மக்களுக்கு பெருமை. இது எங்கள் தலைவரையே சாரும்.
ஜெயலலிதாவின் இந்த பிரச்சாரம் தமிழகத்திற்கும், நாட்டிற்கும் நன்மை பயக்கும் விதமாக இருக்கும். எங்களில் சிலர் தமிழகத்திற்கு வெளியே சென்று பேச முடிவதில்லை, ஏனெனில் எங்களுக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும், இந்தி மொழி தெரியாது. இந்த காலகட்டத்தில் இந்த தொலை நோக்கு பார்வை அவசியம், அதை ஜெயலலிதா செய்திருக்கிறார்.
ஜெயலலிதா ஏற்கனவே புகழ் பெற்றவர். இந்த பிரச்சாரத்தின் மூலம் நாடு முழுவதும் அவரது புகழ் ஓங்கும்.
தேசிய கட்சிகளில் தமிழர்கள் இருப்பது உண்மைதான். ஆனால் திராவிட கட்சியிலிருந்து இந்தி மாநிலத்தில் சென்று இந்தியில் பிரச்சாரம் செய்வது ஜெயலலிதா மட்டும்தான்.
ஒருமுறை டெல்லியில் கூட்டத்தில் பேசும் போது ஆங்கிலத்தில் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆந்திர தலைவர்களுக்கு அவர் பேசியது புரியவில்லை. உடனே அவர்கள் புரிந்துக் கொள்ளும்படி தெலுங்கில் பேசி அவர்களுடைய நன்மதிப்பை பெற்றார் என்றார் மலைச்சாமி.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications