கோவை-முதியவரை தாக்கி கொன்ற 13 யானைகள்
கோவை:கோவை அருகே நாட்ராயன் வனப் பகுதியில் காட்டுக்குள் விறகு பொறுக்க சென்ற முதியவரை 13 யானைகள் சூழ்ந்து தாக்கிக் கொன்றன.
கோடை காலம் வந்து விட்டதால் கோவை மாவட்ட காட்டுப் பகுதியிலிருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக கிராமங்களுக்குள் வந்து வந்து ெசல்கின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் துடியலூர் அருேக உள்ள நாட்ராயன் மலைப் பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் கருப்பசாமி (55) என்பவர் காட்டுக்குள் நேற்று மாலை விறகு பொறுக்கச் ெசன்றார்.
அப்போது யானைக் கூட்டத்திடம் சிக்கிக் ெகாண்டார். 13 யானைகள் அவரைச் சூழ்ந்து கொண்டன. யானைகளைப் பார்த்த கருப்பசாமி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் யானைகள் அவரை விரட்டின.
வேகமாக ஓடியபோது கால் தவறி கீழே விழுந்து விட்டார் கருப்பசாமி. இது யானைகளுக்கு வசதியாகப் போய் விட்டது. கூட்டமாக சூழ்ந்து ெகாண்டு கருப்பசாமியைத் தாறுமாறாக மிதித்தன.பின்னர் அவரைத் தூக்கி அருகில் இருந்த பாறையில் அடித்து ெகாடூரமாக கொன்றன அந்த யானைகள். பின்னர் காட்டுக்குள் யானைகள் போய் விட்டன.
தகவல் அறிந்ததும் கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். நீண்ட காலமாக யானைகள் ஊருக்குள் வருவதும், அவற்றிடம் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாகி விட்டது. எனவே இதற்கு ஒரு முடிவு கட்டும் வரை கருப்பசாமியின் உடலை எடுக்க விட மாட்ேடாம் என அவர்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் அதிகாரிகள் சமாதானம் செய்து கருப்பசாமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications