புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய 7 பேர் கமிட்டி
டெல்லி:இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சரத்பவார் தலைமையில் 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை போட்டியில் இந்திய அணி இலங்கையிடமும், வங்கதேசத்திடமும் மோசமான தோல்வி அடைந்து லீக் போட்டியிலேயே வெளியோறியது.
தோல்வி குறித்து சேப்பல் ஜூனியர் வீரர்கள் மீது சரமாரியாக குற்றம் சாட்டினார். இதையடுத்து சேப்பல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அடுத்த மாதம் இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. இந்த சுற்றுப் பயணத்துக்கு பயிற்சியாளர் யாரும் நியமிக்கப்படவில்லை.
அணியின் மேனஜராக முன்னாள் ரவி சாஸ்திரியும், பீல்டிங் பயிற்சியாளராக ராபின் சிங்கும், பந்துவீச்சு பயிற்சியாளராக வெங்கடேஷ் பிரசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத்பவார் தலைமையில் 7 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ரவிசாஸ்திரி, வெங்கட்ராகவன் மற்றும் கிரிக்கெட் வாரிய பொருளாளர் சீனிவாசன், இணைச் செயலாளர் பாண்டோவ், செயலாளர் நிரஞ்சன் ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் நிரஞ்சன் ஷா கமிட்டியின் கன்வீனராக செயல்படுவார்.
இந்த கமிட்டியின் முதல் கூட்டம் எப்போது நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடாத நிலையில், மே மாதம் முதல் வாரத்தில் இதன் முதல் கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட தற்போது இலங்கை அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாம் மோடியும், வங்கதேச பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வாட்மோரும் விரும்பம் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications