புலிகள் மீண்டும் விமான தாக்குதல்: பலாலியில்குண்டு மழை: தாக்குதல் முறியடிப்பு-இலங்கை
யாழ்ப்பாணம்:விடுதலைப் புலிகள் மீண்டும் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். பலாலி விமான தளம் மீது விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்கள் சரமாரியாக குண்டுகளைப் பொழிந்து நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
ஆனால், விடுதலைப் புலிகளின் விமான தாக்குதலை முறியடித்து விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் இலங்கை படையினருடன் போராடி வந்த விடுதலைப் புலிகள் தற்போது வான் பலத்தையும் பெற்றுள்ளனர். கடந்த மாதம் 26ம் தேதி கொழும்பு அருகே உள்ள காட்டுநாயகே விமானப்படை தளம் மீது அதிகாலையில் நடத்திய விமானத் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
உலக அளவில் வேறு எந்த போராளி அமைப்பிடமோ அல்லது தீவிரவாத அமைப்பிடமோ விமான பலம் இல்லை என்பதால் புலிகளின் இந்த புதிய பலம் அனைவரையும் அதிர வைத்தது.
கொழும்பு தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர். இந்த அதிர்ச்சியிலிருந்தே இலங்கை அரசு இன்னும் மீளாத நிலையில் மீண்டும் ஒரு விமான தாக்குதலை புலிகள் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள பலாலி விமானப்படை தளத்தில் இன்று அதிகாலை புலிகள் தங்களது இலகு ரக விமானத்தால் தாக்குதல் நடத்தியுள்ளனர். சரமாரியாக குண்டு மழை பொழிந்து இந்த விமானங்கள் நடத்திய தாக்குதலால் விமானப்படை தளத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் நிலை குலைந்தனர்.
புலிகளின் தாக்குதலில் 7 பேர் பலியானதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 17 பேர் காயமடைந்தனர். வான் வழித் தாக்குதலின்போது பீரங்கித் தாக்குதலையும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலில் விமான படைத் தளத்தில் உள்ள ராணுவ முகாம் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விமானப் படைத்தளத்திலும் கணிசமான அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் இந்த இரண்டாவது விமானத் தாக்குதல் இலங்கையில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் முறியடிப்பு-இலங்கை
விடுதலைப் புலிகளின் விமான தாக்குதலை முறியடித்து விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக அப்படி ஒரு தாக்குதலே நடைபெறவில்லை என்று கூறியது இலங்கை ராணுவம். ஆனால் தற்போது தனது நிலையை மாற்றிக் ெகாண்டுள்ளது. தாக்குதல் நடந்தது உண்மை. ஆனால் அதை ராணுவம் முறியடித்து விட்டதாக இலங்கை கூறியுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்திக் குறிப்பில், பலாலியில் உள்ள உயர் மட்டப் பாதுகாப்புப் பகுதியில் விடுதலைப் புலிகள் குண்டு வீசித் தாக்க முயன்றனர். ஆனால் அதை ராணுவம் ெவற்றிகரமாக முறியடித்து விட்டது.
பலாலி விமான தள ரன்வேயில் குண்டு வீசப்பட்டதாக புலிகள் கூறுவதில் உண்மையில்லை, அது கட்டுக் கதையாகும். புலிகளின் விமானம் மீது விமானப்படை பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதையடுத்து புலிகளின் விமானம் திரும்பிச் ெசன்று விட்டது.
தப்பிச் சென்ற புலிகளின் விமானம் மயிலடி பகுதியில் இரண்டு குண்டுகளைப் போட்டு விட்டுச் ெசன்றதாக தெரிய வந்துள்ளது. புலிகளின் விமானம் முல்லைத் தீவு பக்கமாக பறந்து சென்றது தெரிய வந்துள்ளது.
விமானத் தாக்குதலை நடத்திய அதே நேரத்தில், பூனேரி பகுதியில், புலிகள் பீரங்கித் தாக்குதலை நடத்தினர். அதில், ஆறு வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் பலாலி விமான தளம் மீதான தாக்குதலின்போது உயிரிழக்கவில்லை என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காட்டுநாயகே விமான தளத்தில் பயன்படுத்தியதைப் ேபாலவே 2வது விமானத் தாக்குதலிலும் 2 விமானங்களை புலிகள் பயன்படுத்தியுள்ளனர என்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications