பகலில் தாக்க தயாரா-புலிகளுக்கு இலங்கை சவால்
கொழும்பு:விடுதலைப் புலிகள் கிளர்ச்சி அமைப்பு அல்ல, அது ஒரு பயங்கராவாத அமைப்பு என இலங்கை போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
நேற்று அதிகாலை பலாலி விமான தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இதையடுத்து அதிபர் ராஜபக்ஷேவின் உத்தரவின்படி, அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ பலாலி விமான தளத்தை பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
யாழ்பாணத்திலும், வன்னியிலும் ராணுவம் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் விடுதலைப்புலிகளும் விமான தாக்குதல் நடத்தி இருப்பது ஆச்சரியம் இல்லை. அவர்கள் தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதுமையில்லை.
விடுதலைப்புலிகள் இரவு நேரத்தில் மட்டுமே தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களுக்கு தைரியம் இருந்தால் பகல் நேரத்தில் விமான தாக்குதல்களை நடத்தட்டும். அப்போது அதை முறியடிப்பது எப்படி என்று நாங்கள் காட்டுகிறோம்.
விடுதலைப்புலிகள் அமைப்பு கிளர்ச்சி அமைப்பு அல்ல, அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றார்.












Click it and Unblock the Notifications