தமிழ் எம்பிக்களுக்கு கருணா கொலை மிரட்டல்?
கொழும்பு:இலங்கையிலுள்ள தமிழ் எம்பிக்களுக்கு கருணா கோஷ்டியிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான மானவசேனாதிராசா எம்.பி. கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,
விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா கோஷ்டியிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பிக்களுக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் வந்துக் கொண்டிருக்கிறது.
நாங்கள் பதவி விலக்க வேண்டும் என பலமுறை கருணா கோஷ்டியினர் தொலைப்பேசியில் மிரட்டி வருகின்றனர்.
இதனால் எம்பிக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என சபாநாயகருக்கும், அரசுக்கும் கடிதம் எழுதினோம். ஆனால் இலங்கை அரசு பெரிதாக கருதாமல் கோரிக்கையை நிராகரித்து விட்டது.
இலங்கை அரசுடன் இணைந்து தான் கருணா கோஷ்டி இயங்கி வருவது எங்களுக்கு தெரியும். எங்களுக்கு விடுக்கப்படும் மிரட்டல்களுக்கும், ஏற்படும் ஆபத்துகளுக்கும் இலங்கை அரசுதான் பொறுப்பு.
இடம் பெயர்ந்து சென்ற தமிழர்களின் முகாம்களில் கருணா கோஷ்டியினரும் ஊடுருவியுள்ளனர். இதனால் முகாம்களுக்கு சென்று மக்களை பார்க்க கூட முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம்.
இது மட்டுமில்லாமல் கருணா கோஷ்டியினர் தமிழர்களை கடத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications