பிரபாகரனை கைது செய்ய காங். கோரிக்கை
சென்னை:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகளாகியும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்து தமிழகத்திற்குக் கொண்டு வர தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சட்டசபையில், காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கேட்டார்.
சட்டசபையில், நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஞானசேகரன் பேசுகையில், பூந்தமல்லி தடா நீதிமன்றம் பிரபாகரனை தலைமறைவுக் குற்றவாளியாக அறிவித்து 16 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனால் இன்னும் பிரபாகரனை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
பிரபாகரனுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டும் 16 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதை செயல்படுத்த தமிழக காவல்துறை இந்த காலகட்டங்களில் எடுத்த நடவடிக்கை என்ன?
சட்டம் செயலிழந்து கிடக்கிறது என்பதையே இது காட்டுகிறது. மத்திய அரசு உடனடியாக இன்டர்போல் உதவியுடன் பிரபாகரனை நாடு கடத்தி இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்கு அவரை உட்படுத்த வேண்டும்.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐயும் தூங்கிக் கொண்டிருக்கிறது. முற்றிலும் செயலிழந்து கிடக்கிறது.
முதல்வர் கருணாநிதி, பிரபாகரனுக்கு எதிராக நிலுவையில் உள்ள பிடிவாரண்ட்டை செயல்படுத்த முனைய வேண்டும்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் கடந்த 3 மாதங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது பல இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் அலுமினிய குண்டுகள், இரும்பு உருளைகள் மற்றும் டெட்டனேட்டர்கள், ஏ.கே.56 துப்பாக்கி, கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், மனித வெடிகுண்டு ஜாக்கெட் உள்ளிட்டவை பிடிபட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் தொடர்புடைய 17 சம்பவங்கள் நடந்துள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தை தங்களது தளமாக புலிகள் பயன்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
புலிகள் அமைப்புக்கு உதவும், ஆதரவு தரும் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மீது தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், தடை விதிக்க வேண்டும்.
புலிகள் அமைப்புக்கு ஆதரவு தருவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பிரயோகித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications