சென்னையில் எம்எல்ஏக்களுக்கு தனி காலனி?
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனி குடியிருப்புகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், பாமக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். அனைத்து உறுப்பினர்களும் இதுகுறித்து ஒருமித்து கோரிக்கை விடுத்தால் நிச்சயம் அது செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி அதற்குப் பதிலளித்தார்.
சட்டசபையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் எம்எல்ஏக்களுக்கு தனி காலனியை அரசு உருவாக்குமா என்று கேட்டார்.
அதற்குப் பதிலளிக்க எழுந்த வீட்டு வசதி துறை அமைச்சர் சுப.தங்கவேலன், நேரடியாகப் பதிலளிக்காமல் சுற்றி வளைத்துப் பேசினார். இதையடுத்து குறுக்கிட்ட ஞானசேகரன், நேரடி பதில் தருமாறு கோரினார்.
அதற்கு தங்கவேலன் இந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் நான் இல்லை. முதல்வர் அழைத்து கேட்டால் எப்போதும் அதை தருவதற்கு இந்த துறை தயாராக இருக்கிறது என்றார்.
அப்போது எழுந்த பா.ம.க தலைவர் ஜி.கே மணி, முதல்வரின் பொன்விழா ஆண்டில் எம்எல்ஏக்களுக்கு இப்படி ஒரு காலனியை ஏற்படுத்திக் கொடுத்தால் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றார்.
பின்னர் காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் பேசுகையில், 50 ஆண்டுகளாக மக்கள் சேவையாற்றி வரும் முதல்வர் எம்எல்ஏக்களின் இந்த கோரிக்கையை நிச்சயமாக ஏற்றுக் கொள்வார் என கூறினார்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், இந்த கோரிக்கை குறித்து எல்லா கட்சிகளின் எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டு தந்தால் கவனிக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications