கள்ளச்சாராயம், கந்து வட்டி, கட்டப் பஞ்சாயத்து:சட்டசபையில் பாமக சரமாரி புகார்
சென்னை: தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்து, கள்ளச்சாராயம், கடத்தல், கந்து வட்டி ஆகியவை பெருகி விட்டது என பாமக தலைவர் ஜி.கே மணி சட்டசபையில் புகார் கூறினார்.
சட்டசபையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மதுவிலக்குத்துறை ஆகியவற்றிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஜி.கே மணி பேசுகையில், தமிழகத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா, கந்துவட்டி, கற்பழிப்பு, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து ஆகியவை பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. இந்த குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வெங்கடேச பண்ணையார், பங்க் குமார் போன்றவர்களை போலீஸார் என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இதுபோன்ற செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருகி வரும் குற்றங்களின் எண்ணிக்கைக்குக் ஏற்ப காவலர்களை அதிகப்படுத்த வேண்டும். அமைச்சக பணியாளர்களையும் கூடுதலாக நியமிக்க வேண்டும். காவல்துறையினருக்கு என்று தனியாக மருத்துவமனை அமைக்க வேண்டும்.
டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ஏரளமான வருமானம் வருகிறது. இந்த வருமானம் நடுத்தர மக்களின் உழைப்பை உறிஞ்சுவதன் மூலம் கிடைக்கும் வருமானம். எனவே படிப்படியாக தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications