இந்தியாவின் முதல் சைவ விமானம்
டெல்லி:முற்றிலும் சைவ உணவுகளே பரிமாறப்படும் இந்தியாவின் முதல் விமான சேவை டெல்லி-சண்டிகர் இடையே தனது சேவையைத் தொடங்கியுள்ளது.
கர்கோவன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டது எம்.டி.எல்.ஆர். ஏர்லைன்ஸ் நிறுவனம். 70 மற்றும் 100 சீட்களைக் கொண்ட விமானத்தை இது இயக்குகிறது. இந்த விமானங்களை பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து லீஸுக்குப் பெற்றுள்ளது எம்.டி.எல்.ஆர் ஏர்லைன்ஸ்.
விமானக் கட்டணம் ரூ. 1000த்திலிருந்து தொடங்குகிறது. முதலில் டெல்லிக்கும்-சண்டிகருக்கும் இடையிலான சேவையைத் தொடங்கியுள்ள இந்த நிறுவனம், அடுத்த 20 நாட்களில் ராஞ்சி, கொல்கத்தாவுக்கும் சேவையைத் தொடங்குகிறது. அதன் பின்னர் மும்பை, சூரத், ஜெய்ப்பூர், பவநகர் ஆகிய ஊர்களுக்கும் விரிவுபடுத்தவுள்ளது.
இதுகுறித்து நிறுவன தலைவர் கோபால் கோயல் கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று முதல் நான்கு ஜெட் விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளோம். பிராந்திய விமான சேவையில் முதலிடத்தைப் பிடிப்பதே எங்களது லட்சியம்.
எங்களது விமானங்களில் முழுக்க முழுக்க சைவ உணவுகளே பரிமாறப்படும். மற்ற விமானங்களில் வசூலிப்பதை விட 12 சதவீதம் குறைந்த கட்டணத்தையே நாங்கள் வசூலிக்கிறோம்.
விமானங்கள் தவிர 27 சீட்கள் கொண்ட இரண்டு கஸான் எம்ஐ-172 ரக ஹெலிகாப்டர்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
சண்டிகரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்படவுள்ளதாம். இதுதவி டெல்லி, ஜெய்ப்பூரிலும் அலுவலகங்களைத் திறக்கவுள்ளனர். அடுத்த ஆண்டுக்குள் இந்த நிறுவனம் 12 விமானங்களை வைத்திருக்குமாம்.
ரூ. 40 கோடி முதலீட்டில் இந்த விமான சேவையைத் தொடங்கியுள்ளது எம்.டி.எல்.ஆர். கட்டுமானப் பிரிவு, வணிக வளாகங்கள், மல்டிப்ளக்ஸுகள், சொகுசு ஹோட்டல்கள் பிசினஸில் இந்த நிறுவனம் ஏற்கனவே ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications